தமிழ் மொழியில் பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன், வரவேற்பு விழாவை நிராகரித்தார்
வடக்கு மாகாண முதல்வராக நாளை பதவியேற்கவுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பில் தனக்கு நடத்தவிருந்த வரவேற்பு விழாவை நிராகரித்துள்ளார்.
நாளை வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்ற பின்னர், கொழும்பில் அவருக்கு முறைப்படியான வரவேற்பு விழா ஒன்றை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டன. ஆனால், இந்த விழாவை அவர் நிராகரித்து விட்டதாக, இந்து கல்வி சமூகத்தின் செயலர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
தனது தெரிவை கொண்டாட வேண்டிய தேவையில்லை என்றும், இது கொண்டாட்டம் நடத்துவதற்கு உகந்த நேரம் இல்லை என்றும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், விழா அமைப்பாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மொழியிலேயே பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்ல விடயம் இப்படியான கொண்டாட்டங்களை தவிர்ப்பது. மணமுவந்து தாங்கள் தம் சமூகம் அடைந்த வெற்றியை கொண்டாடனும் என்றுதான் எங்களுக்கும் விருப்பம், ஆனால், இதுவே இப்போது சடங்கு சம்பிராதயமாக மாறியுள்ளது. இதனால் நல்லவர்களுக்கு மட்டுமல்ல அயோக்கியர்களுக்கும் திருடர்களுக்கும் இந்த நாட்டு அரசியலில் வரவேற்பு விழாக்கள் கோலம் போட்டு, அதிலும் சில பொதுச்சொத்துக்கள் கள்ள கணக்கு இடப்பட்டு அப்பாவிகளின் உள்வீட்டு சொத்துக்களே நாசமாகிறது. சந்தோசத்தை கொண்டாட வேண்டும் என்றால்,இவரை தேர்வு செய்ய உதவிய கடவுளுக்கு நன்றி செய்யுங்கள், அவனின் பெயரால் அவனின் ஏழைப்படைப்புகளுக்கு இந்த விழாவுக்கு செய்யப்படும் செலவைக்கொண்டு தர்மம் செய்யுங்கள், எது எங்கயோ உங்களை கொண்டு போய் நிச்சயம் சேர்க்கும். ஆனால் நம்மவர் இவைகளை செய்யமாட்டார்கள், தவிர பெருமைக்கு மட்டும் உலக்கையை போட்டு தடார் புடார் என மாவு மட்டும் நல்லாக இடிப்பார்கள்.
ReplyDeletenalla mutivu vilakkalai saiwathi vita eelaikalukku unawu koduppathu mihawum siranthathu cheep ministarai nan manamara walththuhiren
ReplyDelete