Header Ads



யாழ்ப்பாணம் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம், புத்தளம் வாழ் புலம் பெயர் மக்கள் சந்திப்பு


யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்று பதிவுகளையும் விபரங்களையும் திரட்டி நூல் வடிவில் வெளியிடவுள்ளது. இதன் ஒரு கட்டமாக மறுமலர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் புத்தளத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை கடந்த 27.10.2013 ஞாயிற்றுக்கிழமையன்று புத்தளத்தில் சந்தித்தனர். கலந்துரையாடல் எம்.எஸ். முனாஸ் ஹாஜியார் அவர்களின் கிராஅத்துடன் ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து உரையாற்றிய தலைவர் ஏ.எம்.சப்ரின் அவர்கள் அமைப்பின்  உருவாக்கப்பட்ட நோக்கம் சம்பந்தமாக பேசினார். தொடர்ந்து பொதுச் செயலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஜான்ஸின் யாழ்ப்பாண முஸ்லிம்களின் புராதன வரலாற்றையும் இடம் பெயர்வின் பின்னர் மக்கள் சிதறுண்டு வாழ்வதால் ஏற்பட்டுள்ள சமூகத் தாக்கங்கள் பற்றியும் அமைப்பின்  கொள்கைகள் நீண்டகால திட்டங்கள் பற்றியும் விளக்கினார். இதன் பின்னர் கூட்டத்துக்கு சமூகம் தந்திருந்தவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.  

இக்கலந்துரையாடலின் போது புத்தளத்தில் வாழும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சமூகநலன் விரும்பிகள் தமது கருத்துக்களை கூறினர். இதன் போது புத்தளத்தில் தவறவிடப்பட்டுள்ள தனிநபர் தகவல்களை திரட்டித் தருவதற்கு புத்தளத்தில் வாழும் வாலிபர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர். இதற்காகவேண்டி றிபாஸ் நஸீர், எம்.பி.நஜுமுதீன் ,  ஹஸன் பைரூஸ், எம்.அம்ஜாத் போன்றவர்களைக் கொண்ட குழுவும் ஏ.எம். அஸ்லம், மொயின், பாரூக் பதீன், யூஸுப் அஸ்ரின், ஏ.ஆர்.எம்.சஜாத் ஆகியோர்களைக் கொண்ட குழுவும் இஸ்மாயில் முஜீபர், எம்.எல்.எம். சபீல் ஆகியோர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இதைவிட தனிநபர்களும் தம்மாலான தகவல்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளனர். 

நன்றியுரை இப்றாகிம் இம்தியாஸால் நிகழ்த்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிளவில் ஸலவாத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.     




1 comment:

  1. இது தொடர்பில் நான் முன்னர் தெரிவித்த கருத்துக்கள் பிரசுரமாகவில்லை. இதாவது பிரசுரமாகும் என்று நம்புகின்றேன்.

    இவர்கள் விருது வழங்குவதற்கு ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளார்கள், அது மிகவுமே கேலிக்குரியதாக உள்ளது. உயர்தரம், சாதரான தரம், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில், பட்டதாரிகள் என்றெல்லாம் பட்டியல் போட்டு விருது வழங்கினால், சொனகதேருவில் விருது பெறத் தகுதியற்றவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். 99% வீதமானவர்களுக்கு விருது கிடைக்கும்.

    எல்லோருக்கும் விருது கொடுக்க வேண்டும், எல்லோரையும் குசிப்படுத்த வேண்டும் என்று வழங்கப்படும் விருதானது, சைவக் கடையில் வடை சுற்றும் பேப்பர் போன்று பெறுமதியற்றதாக ஆகி விடும்.

    வீதியில் கிட்டிப் பொல்லு, கிளித்தட்டு, மாபிள் போளை விளையாடியவர்களை எல்லாம் கூப்பிட்டு விருது கொடுக்கின்றார்கள் என்று நகைச்சுவையாக மாறிவிடும்.

    விருது பெறுபவர்கள் இரெண்டொரு பேராக இருந்தாலும், அது பெருமதியான்வர்களுக்கு மட்டும் வழங்கப்படல் வேண்டும்.

    1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் பொது நலனுக்காக பங்காற்றியவர்களை (மரணித்தவர்கள் உட்பட) தேர்வு செய்து விருதளிப்பதே பொருத்தமாக இருக்கும்.

    சமூகத்திற்கு பயனற்ற வகையில் ஒருவர் தனது தனிப்பட்ட கல்வியறிவை, பொருளாதாரத்தை, கெளரவத்தை வளர்த்துக் கொண்டார் என்பதற்காக விருது வழங்கவும் தேவையில்லை.

    1990 ஆம் ஆண்டு வரையான வரலாற்றுக் காலப் பகுதியில் சொனகதேருவின் பொது நலனுக்காக பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களை கெளரவித்து விருதளிப்பதே பொருத்தமாக இருக்கும்.

    எல்லோருக்கும் விருது கொடுக்க வேண்டும், எல்லோரையும் திருப்திப் படுத்த வேண்டும் என்று நினைத்தால், விருது கொடுப்பதை விட, அன்னதானம் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

    ஏற்பாட்டாளர்கள் இது விடயத்தை கவனிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.