அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனையைப்பிறப்பிடமாகக்கொண்ட மௌலவி இஸ்மாலெப்பை அபூ பிர்னாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை ஜாமியா மன்பஉல் ஹிதாயாவின் பழைய மாணவரான இவர் சஊதி அரேபியாவில் மிக நீண்ட காலமாக இஸ்லாமிய பிரச்சாரகராகவும் அழைப்பாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.
தற்போது இலங்கையில் அமீஸ் நிறுவனத்தின்அழைப்பாளராக செயற்பட்டு வரும் இவர் நிதாஉல் பிர் அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளராகவும் உள்ளார் அத்துடன் ஹஜ் உம்ரா வழி காட்டியாகவும் தனது சேவைகளை மேற்கொண்டு வருகின்றார்.
Post a Comment