Header Ads



எங்கள் நாய்க்கு, நாங்கள் என்ன அலங்காரம் வேண்டுமானாலும் செய்வோம்


கஜானா காலி என்ற நிலையில் அமெரிக்க பொருளாதாரம் உள்ளது. அதே நேரம் அங்கு எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் அமெரிக்கர்கள் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கான டிரஸ் அலங்காரத்துக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ2046 கோடி செலவிடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டு 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாக வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 70 சதவீத ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறையும் அளிக்க ப்பட்டுள்ளது. 

கஜானா காலி என்ற நிலையை அந்நாடு 17 ஆண்டுகளுக்குப்பிறகு அடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. இந்நிலையில் இந்த விஷயத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. சர்வேயில் கூறப்பட்டுள்ள விவரம் என்ன? அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரீட்டெய்ல் பெடரேஷன் என்ற அமைப்பு சர்வே ஒன்றை பெரும்பாலான மாகாணங்களில் நடத்தியது. அமெரிக்கர்கள் வீடுகளில் வளர்ப்பு பிராணிகள் வளர்க்கப்படுகிறதா? அப்படி எனில் அந்த வளர்ப்பு பிராணிகளுக்கான செலவு எவ்வளவு என்பதே அந்த சர்வே. இதில் அதிர்ச்சியான முடிவுகள் கிடைத்தன. இதன்படி

*அமெரிக்காவின் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் நாய், பூனை, பறவைகள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இதில் பெரும்பான்மை சதவீத மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளை அலங்காரம் செய்து அழைத்துச்செல்ல விரும்புகின்றனர். அந்த வகையில் ஆண்டுக்கு 330 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்புக்கு ரூ2046 கோடி) தொகையை செலவிடுகின்றனர். 

*பெரும்பாலான வீடுகளில் நாய்களே விரும்பி வளர்க்கப்படுகிறது. இந்த நாய்களுக்கு தினமும் அசைவ உணவு, வாராந்திர மருத்துவ பரிசோதனை, நாய் தங்குவதற்கான குடில், நாய்களுக்கு உடை, கிளவுஸ், கண்ணாடி, நாய்களுக்கான பிரத்யேக பிஸ்கட் வகைகளுக்கு இந்த தொகை செலவிடப்படுகிறது. இன்னும் சிலர் வாராவாரம் தங்களது நாய்களை பியூட்டி பார்லருக்கும் கூட்டிச்செல்கிறார்களாம். 

*இது குறித்து வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டால், எங்கள் நாய்க்கு நாங்கள் என்ன அலங்காரம் வேண்டுமானாலும் செய்வோம் என்று அதட்டல் போடுகிறார்களாம்.

No comments

Powered by Blogger.