ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு
7 ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய புலனாய்வு பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கியா பெயரில் வழங்கப்படும் விருது மலாலாவுக்கு அளிக்கப்பட உள்ளது.
அன்னா பொலிட்கோவ்ஸ்கியாவை போல் தீரமாக செயல்பட்டதற்காக மலாலாவுக்கு இவ்விருது வழங்கப்படுவதாக தேர்வு கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.
வரும் திங்கட்கிழமை நடைபெறும் விழாவில் இந்த விருதை மலாலா பெற்றுக் கொள்கிறார்.
இது தவிர, ஐரோப்பிய பாராளுமன்றம் வழங்கும் சிறப்பு மிக்க ‘சகாரோவ் மனித உரிமை பரிசு’க்கு தேர்வு செய்யப்பட்ட இறுதிபட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது.
நோபல் பரிசுக்கான தேர்வாளர்களின் பெயர்கள் வரும் 11-ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்த பரிசு மலாலாவுக்கே கிடைக்கலாம் என 80 சதவீதம் மக்கள் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment