வாக்கு வேட்டைக்காக வரும் அரசியல்வாதிகள் கொத்மலை மக்களின் நிலையை பார்க்க வேண்டும்
(அஸ்-ஸாதிக்)
ஊல்லாசப் பிரயாணிகளைக் கவந்து வரும் கொத்மலை பகுதியின் அபிவிருத்தியில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று கொத்மலை பிரதோச சபை உறுப்பினர் மஸிஹுத்தீன் அனஸூல்லாஹ் குறிப்பிட்டார். கொத்மலை பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கொத்மலை பிரதேச சபை வாருமனம் குறைந்த உள்ளுராட்சி மன்றம் எனற் நிலையை மாற்pற வருமானமுள்ள பிரதேச சபையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்குரிய வேலைத்திட்டங்களை பிரதேச சபை முன்னெடுக்க வேண்டும்.
கொத்மலை பிரதேச பைக்குட்பட்ட தொன்னூற்று ஆறு கிராம சேவகர் பிரிவுகளிலும் பிரதேச அடிப்படைத் தேவைக்ள நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. இதனை அரசாங்கம் கவனத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.
நாவலப்பிட்டிய கொத்மலைப் பிரதான வீதியைப் புனரமைத்து காபட் இட்டுத்தருவதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கொத்மலை பகுதி உல்லாசப் பயணிகளைக் கவரும் பிரதேசமாகும். எனவே இப்பிரதேச அபிவிருத்தி நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருக்கும்.
உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள், வியாபார நோக்கிலான பொழுதுபோக்கு நிர்மாணங்களுக்கான அனுமதி கோரி விண்ணப்பங்கள் எமது சபைக்கு வருகின்றது. அவ்வாறான திட்டங்களுக்கான அனுமதியை வழங்கும் போது சுற்றாடல் பாதுகாப்பையும் கருத்திற்கொள்வதோடு சபையின் பொது நிதியையும் அதிகரித்துக் கொள்வதற்கான வருமான வழிகளையும் கவனத்திற்கொள்ள வேண்டும்.
தேர்தல் காலங்களில் வாக்கு வேட்டைக்காக வரும் அரசியல்வாதிகள் கொத்மலை பகுதி கிராமங்களின் நிலையை தூர நோக்கோடு பார்க்க வேண்டும். இப்பகுதியில் குடிநீர்த் பிரச்சினை , வடிகாலமைப்பு, குப்பைகூலங்கள் அகற்றல் என்று பல பிரச்சினைகள் தொடர்கின்றன. இப்பிரச்சினைகள் இனிமேலும் தொடரகூடாது. அத்துடன் கொத்மலையின் இயற்கை அழகு நிறைந்த பொருமதிமிக்க இடங்களைப் பாதுகாத்துப் பயனுள்ள வழியில் பயன்படுத்த திட்டங்;கள் வகுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்;.
Post a Comment