Header Ads



பாலியல் குற்றம் புரிவோரின் பாலுறுப்பை துண்டிக்க வேண்டும் - துணை முதல்வர் அஜித் பவார்

இந்தியா - மும்பை ஜல்னாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த ஒரு விழாவில் துணை முதல்வர் அஜித் பவார் நேற்று கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பாலியல் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வு வேண்டுமானால் தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். எனவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் பாலுறுப்பை துண்டிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

பவார் இது போன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசுவது ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புனேயில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, “மகாராஷ்டிராவிலுள்ள அணைகளில் தண்ணீர் இல்லை எனில் சிறுநீர் மூலமா அதை நிரப்ப முடியும்?” என்று கூறியதற்காக பின்னர் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.