கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாறறங்கள்
(Nf) கிழக்கு மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இடமாற்றங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை மாகாண பொது நிர்வாக அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இந்த இடமாற்றங்களை சிறப்பான முறையில் அமுல்படுத்துவதற்கு திணைக்களத் தலைவர்கள் பூரணை ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று கிழக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா கேட்டுள்ளார்.
இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடமாற்ற சபையின் தீர்மானம் ஏற்கனவே உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்த உத்தியோகத்தர்களுக்கு மேன்முறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அடுத்த மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படவுள்ளன.
2014 ஆம் ஆண்டுக்கான இடமாற்றத்தின்போது உத்தியோகத்தர்களுக்குரிய பதில் ஒழுங்குகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆளணிகள் பற்றியும் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பொது நிருவாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடமாற்றங்களை முறையாக அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்கள் புதிய சேவை நிலையத்தில் குறிப்பிட்ட திகதியில் கடமைகளை பொறுப்பேற்கும் வகையில் விடுவிப்பதற்கு திணைக்களத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment