சம்மாந்துறையில் தேர்தல் பரபரப்பு ஓய்ந்தது - அமைச்சர் மன்சூர் மண் கவ்வினார், மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா
(கதிரவன்)
சம்மாந்துறைப் பற்று பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் 2013ம் வருடத்திற்கான புதிய நிர்வாகக் குழு பல்முனைப் போட்டிக்கு மத்தியில் நேற்று (20.10.2013) இடம்பெற்றது.
சம்மந்துரையைப் பொறுத்தவகையில் இக் கூட்டுரவுச்சங்கமானது முக்கிய கேந்திர நிலையமாக மக்களின் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த ஒரு நிறுவனமாக ஆண்டாண்டு காலமாக இருந்துவந்தது அது மட்டு மல்லாது சுமார் பல நூறு பேருக்கு தொழில் வழங்கும் ஒரு இடமாகவும் பலரது வாழ்வுக்கு ஒளியூட்டியயாகவும் இருந்து வந்தது. முன்னொரு காலகட்டத்தில் சம்மாந்துறைப் பற்று பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் பாரிய பொருளாதார கேந்திர நிலையமாக இருந்து சம்மாந்துறை மக்களின் துயர் துடைத்தது.
ஆனால் இன்று அன் நிறுவனம் வெறும் செல்லாக் காசாக மாறியுள்ளதுடன் அதன் பொருளாதார நிலைமையும் மிக மோசமாக காணப்படுகின்ற நிலமமயானது சம்மாந்துறை மக்களின் இதயத்தில் ஈட்டி பய்ந்ததைப்போன்று மிகுந்த வலியுடன் நிறுவனத்தை இன்று பார்க்கின்றனர்.
தற்போது இதன் புதிய நிருவாக குழுவை தெரிவு செய்யவென பல்முனை அரசியல்போட்டிகள் கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்று ஈற்றில் ஒரு அரசியல் அணி படு தோல்வி அடைய இரு அணி வென்றது 3 வருடத்திற்கு ஒருமுறை போட்டி ஏற்பட்டால் தேர்தல் மூலம் நிருவாகக் குழு தெரிவு இடம்பெறுவது வழக்கம் அதன் அடிப்படையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை தெரிவு செய்யவதற்கே இத்தனை போட்டியும்.
சம்மந்துரையைப் பொருத்தவரையில் பல அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் இருக்கின்றனர் அதில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் ( சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ) ,கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் (தேசிய காங்கிரஸ் ) சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் ( ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ) ஆகியோரே தற்போது சம்மந்துரையின் களத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள்.
இவர்களின் பார்வைகளும் சம்மாந்துறைப் பற்று பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பக்கம் திரும்பி சங்கத்தை தத்தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பல பிரயச்சித்தங்களை செய்தனர் ஈற்றில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் தனியாகவும் கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் ஆகியோர் கூட்டாகவும் இயங்கத்தொடங்கினர். இதில் கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் கணக்காளர் ரபீக்கின் தலைமையிலான ஏழு பேரை களமிறக்கினார் கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌசாத் ஆகியோர் கூட்டக்க இணைந்து வைத்தியர் ரசீத் தலைமையிலான ஒன்பது பேரை களமிறக்கினார்கள் இக்குழுவில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவர் .
ஒன்பது நிர்வாக குழு உறுப்பினர்களை தெரிவு செய்ய பொதுச் சபை உறுப்பினர்கள் நூறு பேரும் தேத்தல் மூலம்வாக்களிப்பார்கள் தேர்தல் தினத்தன்று 97 பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டு ஒன்பது நிர்வாக குழு உறுப்பினர்களை தெரிவு செய்தனர் இதில் 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 5பேரும் ,35 வயதிற்கு கீழ்பட்ட ஆண்கள் 2 பேரும், 2 பெண்களும் அடங்கலாக
மொத்தம் 09 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு நிருவாக குழுவை தெரிவு செய்ய இடம்பெற்ற தேர்தலானது ஒரு பொதுத் தேர்தலுக்கான தேர்தல் போன்று வியூகங்கள் வகுக்கப்பட்டு இடம் பெற்றமையானது வேடிக்கையாக இருந்தது
வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 09 பேரில் கிழக்கு மாகான சுகாதார
அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூறினால் கணக்காளர் ரபீக்கின் தலைமையிலான 07 பேரும் படு தோல்வி அடைந்தனர் ஒருவரையேனும் வென்றெடுக்க முடியாமல் போய்விட்டது. கிழக்கு மாகான கூட்டுறவு அமைச்சை தன்னகத்தே வைத்துக்கொண்டு கூட்டுறவுச்சங்கம் ஒன்றின் நிருவாக குழுவில் ஒரு அங்கத்தவரை கூட தேர்தல் மூலம் பெறமுடியாமல் தோற்றுப் போன விடயம் அமைச்சரை தலைகுனிய வைத்துள்ளது.
சம்மாந்துறைப் பற்று பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் உயர்ச்சிக்கு புதிய நிருவாகக் குழு எத்தகைய நல்ல முயற்சிகளை மேற்கொள்ளப்போகிறார்கள்
என்று பார்ப்போம் மாறாக அலிபாபா கதையாக இருக்குமா என்றும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டியுள்ளது வெற்றி பெற்ற அரசியல் தலைமைகளே, மக்கள் பாரிய அமானிதத்தை உங்களூடாக இவர்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் இன்றைய சம்மாந்துறைப் பற்று பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் உண்மை நிலை தெரியாத எவரும் சம்மாந்துறையில் இல்லை என்பதையும் தங்கள் கவனத்தில் கொண்டு செயற்படுவீர்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் நிறைவேறுமா ?
Post a Comment