Header Ads



தேசிய நீர், வடிகாலமைப்புச் சபையின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தின் அறிவிப்பு

(எம்.எம்.ஏ.ஸமட்)

நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறுவோரின் குழாய் நீர் இணைப்பைத் துண்டிக்கு தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் கல்முனைப் பிராந்திய அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் கல்முனைப் பிராந்திய அலுவலகப் பொறுப்பதிகாரி குழாய் நீர் பாவனையாளர்களுக்கு விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாவது

கல்முனைப் பிராந்தியத்துக்குற்பட்ட குழாய் நீர் பாவனையாளர்களின் இம்மாத நீர் பாவனைப் பற்றுச் சீட்டில் 500 ரூபாவுக்கு மேல் நிலுவைத் தொகை காணப்பட்டு அத்தொகை செலுத்தப்படாதிருப்பின் அப்பானையாளர்களின் குழாய் நீர் இணைபபு 07.10.2013ம் திகதியுடன் துண்டிக்கப்படும். 

அத்துடன் துண்டிக்கப்படும் குழாய் நீர் இணைப்பைப் மீளப் பெற வேண்டுமாயின் வீட்டுக்கான இணைப்பாக இருப்பின் 2440 ரூபாவையையும் ஏனைய இடங்களுக்கான இணைப்பாக இருப்பின் 6200 ரூபாவையும் செலுத்தி இணைப்பை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்

இவ்வறிவித்தலைக் கவனத்திற்கொண்டு, அசௌகரியங்களதை; தவிர்க்கும் முகமகா உரிய திகதிக்கு முன்னர் நிலுவைத் தெகையைச் செலுத்தி இணைப்புத் துண்டிக்கப்படுவதைத் தவர்த்துக்கொள்ளுமாறு பாவiணாயர்கள் வேண்டப்படுவதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பச் சபையின் கல்முனைப் பிராந்திய அலுவலக பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.