அமைச்சுப் பதவி என்பது அமானிதமாகக் கிடைக்கப்பெற்றதாகும் - உதுமாலெப்பை
(எம்.எம்.ஏ.ஸமட்)
அமானிதமாக கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தை மக்கள் நலன் விருத்திக்காக பிரயோகிப்பதில் எத்தகைய தடைகள் வந்தாலும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் தொடரப்படும். இவ்வாறு கிழக்கு வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர்வழங்கல் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் நீர்ப்பாசன எழுச்சியில் மற்றுமொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, அமைச்சர் அதாவுல்லாவின் வழி காட்டலின் கீழ் அட்டாளைச்சேனையில் (21.10.2013) ஆரம்பமான 'நீப்பாசன வாரத்தையொட்டி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றான மீனோடைக்கட்டு கோணாவத்தை வடிச்சல் திட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சுப் பதவி என்பது அமானிதமாகக் கிடைக்கப்பெற்றதாகும். அதைச் சரியாகவும் முழுமையாகவும் பிரயோகிக்கும் போதுதான் அதன் முழுப் பயனையும் அடைய முடியும்.
அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் பிரதேசங்களுக்கும் எவ்வித வேறுபாடுகளுமின்றி எனது அரசியல் அதிகாரம் சரியாகவும் முறையாகவும்; பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கிழக்கின் சகல பிரதேசங்களிலும் எனது அமைச்சினால் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றைக் கூறிக்கொள்வதில் நான் ஆனந்தமடைகின்றேன்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸினுடாக போட்டியிட்டு வெற்றியீட்டியதன் பயனாக அமைச்சர் அதாவுல்லாவின் சிபாரியின் பெயரில் கிடைக்கப்பெற்ற இந்த அமைச்சினூடாக கடந்த 4 வருடங்களில் எவ்வித வேறுபாடுகளுமின்றி இம்மாகாணத்தின் சகல பிரதேசங்களிலும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள முடிந்தது.
2012ஆம் நடைபெற்ற கிழக்கு மாகாண சபையின் இரண்டாவது தேர்தலின்போதும் வெற்றியீட்டிய எனக்கு தேசிய காங்கிரஸி;ன் தலைவரின் சிபாரினால் ஜனாதிபதியினால் மீண்டும் நான் முன்னர் வகித்த அமைச்சுப் பதவியே வழங்கப்பட்டது. இறைவன் உதவியால் நல்ல எண்ணத்தோடு எனக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தியதனாலேயே எனக்கு மீண்டும் இவ்வமைச்சுப் பதவி கிடைக்கப்பெற்றது என நான் நினைக்கின்றேன்.
நான் எந்த ஊரின் சொந்தக் காரணாக இருக்கின்றனோ அந்த அட்டாளைச்சேனையின் தேவைகளை எனது அமைச்சுப் பதவியினூடாக நிறைவேற்றி வருகின்றேன்.
ஒரு ஊருக்கு அழகு ஆறு என்பார்கள். அத்தகைய ஆறான கோணாவத்தை ஆற்றுப்பிரதேச சுற்றுச் சூழல் பல வருடங்களாக கவனிப்பாரற்று மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இவ்வமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்ற பின் பல்வேறு தரப்பினராலும் அசுத்தமாக்கப்பட்டிருந்த இக்கோணாவத்தை ஆறு அகலமாக்கப்பட்டு அதன் சுற்றுப்புறச் சூழல் சுத்தமாக்கப்பட்டு இன்று இப்பிரதேசத்தின் சகல இன மக்களும் இவ்வாற்றின் ரம்பியமான தென்றலின் இன்பத்தை அனுபவிக்க வந்து செல்கின்றனர். சுத்தமான காற்றைச் சுவாசிக்கின்றனர்.
அரசாங்கம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது. அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றுப்பிரதேசமும் பிரதேச வாசிகளின் சுற்றுலாப் பிரதேசமாக மாறி வருகிறது.
இவ்வாற்றில் 'சீபிலேனை' இறக்குவதற்கான முயற்சிகளும் அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கையின் அழகையும் அதன் இன்பத்தையும் சுவைத்திட இந்த கோணாவத்தை வடிச்சல் திட்டம் பயனித்துள்ளது. அந்த வகையில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வள்ளக்;குண்டு வடிச்சல் திட்டம், இப்றாஹீம் பள்ளம், மீனோடைக்கட்டு கோணாவத்தை வடிச்சல் திட்டத் தொடர் என்பன அட்டாளைச்சேனை பிரதேச விவசாயிகளுக்கு மாத்திரமி;ன்றி அதன் அயல் பிரதேச விவசாயிகளுக்கும் பயனிக்கவுள்ளது.
சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தின் முதற்கட்ட அவிருத்தி நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டம் முற்றுப்பெற்றவுடன் வேளாண்மை செய்யப்படாதுள்ள ஏறக்குறைய 8ஆயிரம் ஏக்கர் விவசாயக் காணிகளில் எவ்வதி பிரச்சினையுமின்றி நெல் சாகுபடி செய்ய முடியும.; 500 மில்லியன் ரூபா நிதிச் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இந்த சம்புக்களப்பு வடிச்சல் திட்டத்தை 2015ஆம் வருடத்திற்குள் நிறைவு செய்ய விவசாயப் பொறியிலாளர்கள் திட்டமிட்டுள்ளனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் விவசாயிகளின் பூமி. மிகச் சிறந்த அரிசு இந்நாட்டுக்குக் கிடைக்கும் பிரதேசங்களில் நமது பிரதேசமும் ஒன்று. அவ்வாறு வளம்பொறுந்திய மண், வளம் பெற்று நமது பொருளாதாரமும் வளர்ச்சியடைவதற்கான சகல அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
இதன்போது இடம்பெறும் சிறு சிறு சலசலப்புக்களினால் தூய எண்ணத் தேடு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப பணிகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. அவ்வாறு தடைகள் வந்தாலும் அத்தடைகளுக்கு அப்பால் மக்களின் நலனுக்கான அபிவிருத்திப் பணிகள் இறைவன் உதவியால் முன்கொண்டு செல்லப்படுமென அமைச்சர் உதுமாலெப்பை தனது நழுண்ட உரையின்போது குறிப்பிட்டார்.
Post a Comment