கல்முனையில் வறுமை ஒழிப்பு திட்டநிகழ்வுகள்
(அப்துல் அஸீஸ் + யு.எம்.இஸ்ஹாக்)
ஒக்டோபர் 17 இன்று அனுஸ்டிக்கப்படும் சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கல்முனைப் பிரதேசசெயலக சமுர்த்தி சமூக அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் ஊடாக வாழ்வாதார வேலைத்திட்டங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு, வறுமானம் அதிகரிக்கப்பெற்ற குடும்பங்களுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, வறிய குடும்பங்களுக்கான வீடு வழங்கும் நிகழ்வு, சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் ஆகக்கூடிய நிதியினை ஈட்டிய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு என்பன இடம்பெற்றன.
தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யு.பி.ஏ.அனுரத்த பிரியதாச, பிரதேசசெயலாளர் எம்.எம்.நௌபல், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் உட்பட பிரதேசசெயலக அதிகாரிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment