Header Ads



முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாடு செய்த ஊர்வலம்

(யு.எம்.இஸ்ஹாக்)

யுத்தத்திற்கு பின்னரான சூழலில்  பெண்கள் சகல மட்டங்களிலும் ஈடுபடுவதனை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் 31.10.2000 ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட 1325வது  பிரகடனத்தை உறுதிப்படுத்தும் வகையில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி ஏற்பாடு செய்த நினைவு ஊர்வலம்  கல்முனையில்  இன்று 31.10.2013 காலை நடை பெற்றது.

கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை முன்றலில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் கல்முனை பிரதேச செயலகம் வரை சென்று கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்தனர்  பிரகடனத்தை  நிறுவனத்தின் அதிகாரி எம்..எஸ்.ஜெலீல் வாசித்து கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல்  இடம் பிரகடனப் பிரதியை கையளித்தார் 

ஐக்கிய  நாடுகள் பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட  யுத்தத்துக்கு பின்னரான  சூழலை உறுதிப்படுத்தும்  1325வது பிரகடனம்  கொண்டுவரப்பட்டது. இதில் பிரதான முக்கிய தூண்கள்  எனக்கூறப்படும் தீர்மானம் எடுக்கும் விடயங்களிலான பங்குபற்றல்,தடுத்தல்,பாதுகாத்தல்,இடர்காப்பு நிவாரணம் போன்றவையான  விடயங்களை  எமது பிரதேச மாவட்ட  மக்கள் அனைவரும்  இன்றிலிருந்து செயல் படுத்துவோம் அதற்க்கு 1325ஐ  சகல மட்டங்களிலும் செயல் படுத்துவோம் என  பிரகடனம் செய்யப்பட்டது.



No comments

Powered by Blogger.