சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம்
(யு.எல்.எம். றியாஸ்)
இலங்கை சென்ஜோன்ஸ் அம்பிலன்ஸ் இனால் நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்கள் தோறும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய குடும்பத்தலைவர், தலைவிகளுக்கு இத்திட்டம் தொடர்பாகவும் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் உரிமை,சிறுவர் துஸ்பிரயோகம் ஆகியன உள்ளடங்கிய "பாதுகாப்பான சிறுவர் உலகம்" எனும் தொனியில் அண்மையில் பயிற்சிப் பட்டரை ஒன்று சம்மாந்துறையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ,மன்சூர் தலைமையில் சென் ஜோன்ஸ் அம்பிலன்ஸ் கிழக்கு மாகான பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை சென்ஜோன்ஸ் அம்பிலன்ஸ் தவிசாளர் கலாநிதி பாலித ரந்தெனிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இலங்கை சென்ஜோன்ஸ் அம்பிலன்ஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment