அங்கொடை வைத்தியசாலையில் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் (படங்கள்)
அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20)திகதி அக்குறனையில் இயங்கும் கெல்பிங் கேண்ட் சமுக சேவையாளர்கள் 930 மனநோயர்களுக்கும் ஹஜ்ஜூப் பெருநாள் உணவுகளை வழங்கியும் மற்றும் வார்ட்டுகளுக்கு தளபாடங்களையும் அன்பளிப்புச் செய்தனர்.
இவ்வைத்தியசாலையில் முவீனங்களையும் சேர்ந்த 1000 மனநோயாளர்கள் தங்கிநின்று வைத்தியம் பெறுகின்றனர். இவ் வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. குறிப்பாக இவர்களுக்கு உடுப்புக்கள் மற்றும் வெற்சீட்களை வழங்குமாறும் அங்குள்ள மருத்துவ ஊழியர்கள் வேண்டிக்கொண்டனர்.
இவ்வைத்தியசாலையில் 60 வருடகாலமாக தங்கி மருத்துவம் பெறும் நோயாளிகள் பலர் உள்ளனர். சில நோயாளிகள் தமது வாழ்நாளையே இங்கே கழித்து வருகின்றனர். சில நோயாளிகள் வைத்தியசாலைவிட்டு ஓடுவார்கள் அவர்களை தேடி பொலிசார் பிடித்து மீள ஒப்படைக்கின்ற சர்ந்தப்பமும் இங்கு அடிக்கடி நடைபெறுகின்றன. சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளையும் அல்லது உறவினர்கள்; தமது தந்தை தாய்யையும் இங்கு அனுமதித்து விட்டு செல்கின்றனர். அந் நோயாளிகளை அவர்களை வந்து பார்க்காமலேயே உள்ளதாகவும் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கெல்பிங் கேன்ட் ஒரு சமுக சேவையாற்றும் நிறுவனம் இந் நிறுவனம் அக்குறனையில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கடந்த 3 வருடகாலமாக கண்டிப்பிரதேசங்களில் ஏழைமக்களுக்கு கைகொடுத்து வருகின்றனர். அவர்கள் ஏற்கணவே அக்குரணையில் 16க்கும் மேற்பட்ட வீடுகள் 36 கிராமங்களுக்கு குடிநிர் பாடசாலை மாணவர்களுக்காக பாடப்புத்தகங்கள், வைத்திய உதவிகள் மற்றும் மணிதபிமான உதவிகளை செய்துவரும் ஒரு நிறுவனமாக அந் நிறுவனத்தின் உறுப்பினர் இர்பான் தெரிவித்தார். கண்டியில் இருந்து இவ் வைத்தியசாலைக்கு உதவுவதை பாராட்டுவதாக அங்கொட வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரி தெரவித்தார்.
Post a Comment