சாதனை படைத்த சிங்கள மாணவனை கௌரவித்த முஸ்லிம்கள்
(அபூ பயாஸ்)
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு பரிசும்,பாராட்டும் நிகழ்வும் இன்று ஏறாவூரில் இடம்பெற்றது.
சென்ற முதலாம்திகதி சர்வதேச சிறுவர் தினத்தில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பெறுபேற்றில் அம்பாறை மாவட்ட, தெஹியத்தகண்டி சிங்கள மாணவன் அம்மாவட்டத்தில் முதலாமிடத்தை தக்கவைத்துள்ளார்.
தெஹியத்தகண்டி,தேசிய பாடசாலை மாணவனான தருஷ டினால் சிறிமான்ன என்ற மாணவனே 192 புள்ளிகளை பெற்று அப்பாடசாலைக்கும்,அம்மாவட்டதுக்கும் பெருமை சேர்த்துவராகும்.
எனினும்,புலமைப் பரிசில் பரீட்சையில் புலமைகாட்டி சாதனை படைத்த மாணவர்களுக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள நிறுவனங்களோ ,சமூக ஆர்வலர்களோ ஊக்கமும்,பாராட்டும் அளிக்கவில்லை என்ற தகவல் ஏறாவூர்,நல்லிணக்கம் மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தின் தலைவரும்,பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களுக்கு எத்திவைக்கப்பட்டதின் பேரில் இச்சாதனை மாணவனையும்,அவரது பெற்றோர்களையும் ஏறாவுருக்கு அழைத்து பரிசு வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இது எதிர்கால இன ஐக்கியத்தின் குறியீடாக பார்க்கவேண்டும் என ஏறாவூர் நல்லிணக்கம்,மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தின் தலைவரும்,மரண விசாரணை அதிகாரியுமான அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
Post a Comment