வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் உதாரணம் காட்டிய மோடியும், சொன்ன சம்பவமும்..!
வடக்கு மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அண்மையில் உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்வில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொன்ன குட்டிக் கதை
அண்மையில் நரேந்திர மோடி மிக முக்கிய கருத்தொன்றை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது 'நல்லாட்சி என்பது ஆளுவதை மட்டும் நோக்காகக் கொண்டதாக இருக்கக் கூடாது. இது மக்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி மேற்கொள்ளப்பட வேண்டும். நல்லாட்சி என்பது மக்கள் மையப்படுத்தப்பட்டு, அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டும்' என நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத் மக்களின் மனங்களை வென்ற ஒரு தலைவரால் கூறப்பட்டுள்ள இக்கருத்தானது எமக்கும் பொருத்தமானதாகும்.
தமது வாழ்வை முதன்மைப்படுத்தி சுயநலவாத அரசியல்வாதிகள் தமது செயற்பாடுகளை மேற்கொள்கின்ற இந்தவேளையில், நான் ஒரு சம்பவத்தைக் கூறவிரும்புகிறேன்.
எனக்கு சிங்களவர் ஒருவர் நண்பராக இருந்தார். நாங்கள் இருவரும் சட்டக்கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். 1977ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது, எனது சிங்கள நண்பர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கையோடு எனது நண்பருடன் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தேன்.
நான் அவரிடம் 'நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என வினவினேன். 'ஓ! இந்தத் தேர்தலில் வெற்றி கொள்வதற்காக நான் நிறையப் பணம் செலவழித்திருக்கிறேன். இந்தப் பணத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டை நான் செய்யவேண்டாமா?' என அவர் பதிலளித்தார்.
பணம் சேர்ப்பதை நோக்காகக் கொண்டே தான் அரசியலுக்குள் நுழைந்தேன் எனது நண்பர் கூறினார். இவர் பின்னர் ஜே.வி.பி ஆல் படுகொலை செய்யப்பட்டார் என்பது வேறுகதை.
ஆகவே அரசியலுக்குள் நுழைவதென்பது பணத்தைச் சேகரிப்பதற்காகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதி சுயநலமாகச் செயற்படுவதற்காக என்ற கருத்து நிலவுகிறது.
குஜராத் முதல்வர் நரேந்திர மூடி ஒரு கொலை வெறியன் என்பது முதலமைச்சருக்கு தெரியாமல் போய் விட்டதா?
ReplyDelete