Header Ads



இன, மத பேதங்கள் இன்றி மக்களின் சேவகனாக நாம் மாறவேண்டும் - தயாசிறி

சகல அதிகாரிகளும், நேர்மையாகவும் திறமையாகவும் தமது கடமைகளை ஆற்றவேண்டும் என்பதே எனது அவா. தமது கடமையின் பிரதிபலனை மக்கள் கண்டுகொள்ள வேண்டும். இன மத பேதங்களோ, கட்சி வேறுபாடுகளோ இன்றி மக்களின் சேவகனாக நாம் மாறவேண்டும். மக்கள் சேவையில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குருநாகலில் 07-10-2013 இடம்பெற்ற பதவியேற்கும் வைபவத்தில் பேசும்போதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  இவ்வைபவத்தில் மேலும் பேசிய முதலமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

தேர்தலுக்கு முன்னர் இருந்த நிலைமைகளை மறந்து நாம் ஒன்றுபட்டு மக்களுக்காக சேவை செய்ய தம்மை அர்ப்பணிப்போம். இச்சேவையில் ஏற்படும் எவ்வித சவால்களையும் எதிர் நோக்க தயாராக உள்ளேன். எவ்வித வேறுபாடு மின்றி மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கமாகும்.

ஜனாதிபதி தலைமையிலான இன்றைய ஆட்சியின் கீழ் வடமேல் மாகாணத்தின் சகல பிரதேசங்களும் அபிவிருத்தி யுடையதாக மாற்றப்படும். அபிவிருத்தியில் எவ்வித சவால்களையும் வெற்றிகொண்டு தனது சேவையை தொடர்வேன் என்று கூறினார்.

No comments

Powered by Blogger.