தலையில் பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்த வாலிபர் (படம்)
சீனாவில் தலையில் பத்து அங்குலத்திற்கு பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெற்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.சீனாவின் வடகிழக்கே உள்ள ஜீன் மாகாணத்தில் உள்ள யான்ஜி என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஹோ லுங். இவர் பழம் நறுக்கும் கத்தியை வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் குறும்பாக விளை யாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர் ஒருவர் இவர் மீது விளையாட்டாக பாய்ந்த போது கத்தி தவறுதலாக ஹோ லுங் தலையில் வசமாக பாய்ந்தது.
சுமார் பத்து அங்குல ஆழத்திற்கு தலைக்குள் கத்தி புகுந்தது. இதனை கண்டு நண்பர்கள் அலறினர். கொலை செய்து விட்டோமோ என்று அஞ்சியபடி அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றனர். ஆனால் லேசாக ரத்தம் வழிந்த நிலையில் ஹோ லுங் அங்கிருந்து நடந்தே வந்து அருகில் உள்ள மருத்துவமனையில் இருக்கும் வரவேற்பு அறையில் அமர்ந்தார்.
வரவேற்பு பெண்மணியால் முதலில் இதனை நம்பவே முடியவில்லை. அதன்பிறகு இது உயிருக்கு ஆபத்தான காயம் என்று கருதி உடடினயாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது 10 அங்குல ஆழத்தில் கத்தி புதைந்திருப்பது தெரிந்தது.
சுமார் 3 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு ஹோ லுங்க் தலையில் இருந்த கத்தியை டாக்டர்கள் அகற்றினர். இதுஒரு மருத்துவ அதிசயம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தற்போது ஹோ லுங்க் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment