வாகனங்கள் எழுப்பம் ஒலியினால் சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம்
(எம்.எம்.ஏ.ஸமட்)
வாகனங்கள் எழுப்பம் ஒலியினால் சூழல் மாசடைவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டம் விரைவில் அமுல்படுத்தப்படுமென சுற்றாடல்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வாகனங்கள் குறித்த அலகு ஒலியை விடயவும் அதிகளவு ஒலி அலகைக் கொண்ட 'ஹோன்' களைப் பயன்படுத்துகின்றன. இதனால் எழுப்பப்படும் ஒலியினால் சூழல் மாசடைவதாக பொது மக்களிடம் இருந்து அதிகளவு முறைப்பாடுகள் அமைச்சுக்குக் கிடைத்துள்ளன.
பொது மக்களின் முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, குறித்த அலகு ஒலியை விடவும் அதிக ஒலி எழும்பும் வாகனங்கள் தொடாபில் இப்புதிய சட்டம் நடைமுறைப்டுத்தப்படவுள்ளது.
2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சுற்றாடல் சட்டத்தின் மூலமும் போக்குவரத்து அமைச்சின் 2012ஆம் ஆண்டின் சுற்று நிருபத்தின் ஊடகாவும் அதிகரித்த அலகு ஒலி எழுப்பும் வாகனங்கள் தொடர்பில் பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
சூழலை மாசுபடுத்தும் அதிக அலகு ஒலியை எழுப்பும் வாகனங்கள் தொடர்பான புதிய சட்டம் முதலில் கொழும்பில் அமுல்படுத்தப்படும். பின்னர் ஏனைய நகரங்களுக்கும் இச்சட்டம் விஸ்தரிக்கப்படவுள்ளதுடன் இச்சட்டத்தின் மூலம் குற்றமிழைப்பர்களிடமிருந்து தண்டப்பணமாக 3000 தொடக்கம் 5000 ரூபா வரை பெறப்படவுள்ளது.
இப்புதிய சட்டம் 3 மட்டங்களில் அமுல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த அலகு ஒலியை விட அதிகளவு ஒலி அலகு கொண்ட 'ஹோன்'கள் பொறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படுவதுடன், தற்போது வாகனங்களில் பொறுத்தபட்டுள்ள அதிக ஒலி அலகு கொண்ட 'ஹோன்'கள் அகற்றப்படும். மேலும், 'ஹோன்'களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் அறிவூட்டப்படும் நடவடிக்கைகளும் இப்புதிய சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இலங்கையிலுள்ள 95 வீதமான வாகனங்களின் ஒலி அலகு முறையான மட்டத்தில் காணப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன், அம்புலன்ஸ் போன்ற அவசர சேவையில் ஈடுபடும் வாகனங்கள், தீணயைப்பு வீரர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், பொலிஸ் வாகனம் மற்றும் புகையிரதங்கள் என்பவற்றுக்கு இந்தப் புதிய சட்டம் அமுல்படுத்தப்படாது என சுற்றாடல்துறை அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. வானங்கள் எழும்பும் ஒலியினால் சூழல் மாசடைவதைத் தடுக்கும் இப்புதிய சட்டத்தைப் பொலிஸ் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் மோட்டர் போக்குவத்துத் திணைக்ளம் என்பன கூட்டாக இணைந்து நடைமுறைப்படுத்துமென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment