Header Ads



ஹல்துமுல்லை பிரதேச சபைக்கு நிர்வாகக் கட்டிடம் - அதாஉல்லா அடிக்கல் நாட்டினார்

(ஜே.எம்.வஸீர்)

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் கீழ் இயங்கும் புறநெகும வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டில் காணப்படும் 108 வருமானம் குறைந்த உள்ளூராட்சி சபைகளை இனங்கண்டு அவற்றுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏனைய வசதிகளையும் வழங்கும் திட்டத்தின் கீழ் ஹல்துமுல்லை பிரதேச சபையின் புதிய நிர்வாகக் கட்டிடத்திற்கான அடிக்கல் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களினால் நடப்பட்டது. இதற்காக அமைச்சினால் 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சய் லொக்கு பண்டார, ஊவா மாகாண சபை உறுப்பினர் சுமித் சமயதாச, ஹல்துமுல்லை பிரதேச சபை தவிசாளர் ஆர்.எம்.தனரத்ன, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அப்துல் மஜீட், புறநெகும செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஆனந்த கமகே ஆகியோரை படத்தில் காணலாம்.



No comments

Powered by Blogger.