பௌத்த பிக்குகளினால் விஹாரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட ஆசிரியர்
ஆசிரியர் தினமன்று பௌத்த பிக்குகளினால் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஊர்வலமொன்றில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்ட பால் பக்கற் கலாவதியானது என ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமுற்ற நிகழ்வு ஏற்பாட்டாளர்களான பௌத்த பிக்குகள் ஆசிரியரை தாக்கியுள்ளனர்.
ஆசிரியரை விஹாரைக்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். தாஷன புஸ்பகுமார என்ற ஆசிரியரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஆசிரியருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment