யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க புகையிரதங்களுக்கு அதி சக்தி வாய்ந்த கமராக்கள்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
புகையிரதங்களில் மோதி யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்கும் பொருட்டு புகையிரதங்களுக்கு அதி சக்தி வாய்ந்த கமராக்கள் பொருத்தப்படவுள்ளன.
இலங்கையில் அண்மைக்காலமாக யானைகள் புகையிரதங்களில் மோதி கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக திருகோணமலை-மாகோ சந்திக்கு இடைப்பட்ட பிரதேசங்களில் இரவுவேளைகளில் யானைகள் புகையிரதத்தில் அதிகம் மோதுண்டு கொல்லப்படுவதாகத்தெரிவிக்கப்படுகின்றது.இவற்றைத்தடுக்கும் பொருட்டு புகையிரதத்திணைக்களம் அதி சக்தி வாய்ந்த கமராக்களை புகையிரதங்களின் என்ஜின்களின் மேல்பகுதியில் பொருத்த நடவடிக்கையெடுத்துள்ளது. இதனால் ஒரு கிலோ மீட்டருக்கப்பால் வரும் யானைகளை இலகுவாக அடையாளங்கண்டு கொள்ளமுடியும்.இதன் பெறுமதி 27 லட்சம் ரூபாவாகும்.
Post a Comment