'அமெரிக்காவுடனான தொடர்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்' - சவூதி இளவரசர் அதிரடி
(Inne) அமெரிக்காவுக்கு எதிராக சவுதி அரேபியாவின் இளவரசர் வெளியிட்டுள்ள கருத்துக்களினால் மத்திய கிழக்கு அரசியலில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவின் இளவரசராக இருப்பவர் பந்தர் பின் சுல்தான். இவர் புலனாய்வுத்துறையின் தலைவராகவும் இருந்து வருகிறார். ஐரோப்பியப் பிரதிநிதிகளைச் சந்தித்த பந்தர் பின் சுல்தான், ”அமெரிக்காவுடனான தொடர்பில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் நடைபெற்று வரும் போரில் அமெரிக்கா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மற்றும் ஈரானுடன் அமெரிக்கா தற்போது நெருக்கம் காட்டி வருவதும் இந்த மாற்றத்திற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர 2011 ஆம் ஆண்டு பஹ்ரைன் ஆட்சிக்கெதிராக போராடியவர்களை சவுதி அரேபியா கட்டுப்படுத்திய போது, அதற்கு உறுதுணையாக அமெரிக்கா நிற்காததும் ஒரு காரணம் எனத் தெரிய வருகிறது. இளவரசரின் இந்த உரை, சவுதி அரேபிய மன்னரின் ஒப்புதலுடன் பேசப்பட்ட ஒன்றா எனத் தெரியவில்லை.
மாறி வரும் அரசியல் சூழலில், அமெரிக்காவை மட்டும் சார்ந்து நிற்பது சவுதி அரேபியாவிற்கு உகந்ததாக இருக்காது என்பதால் அமெரிக்காவுடனான உறவில் சற்று விரிசல் போக்கினை அந்த அரசுக் கைக்கொள்ளலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவுடன் போர் ஏற்பட்டால், சவுதியின் எண்ணெய் வளங்களை தங்களால் பாதுகாக்க இயலாது என்று அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் ஒரு ராஜதந்திர நாடகம்.
ReplyDeleteஇவர்கள் அடிபப்து போன்று நடிப்பார்களாம், அமெரிக்கர்கள் அழுவது போன்று நடிப்பார்களாம்.
இதற்கு இரு நாடுகளுக்கும் இரண்டு வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்.
எகிப்தில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட அதிபர் முர்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவிக்கும் யூதப்பெண்ணின் மகனான சிஸிக்கு பகிரங்கமாக ஆதரவும், பண உதவியும் செய்வதால் , சவுதியின் பெயர் முஸ்லிம்கள் மத்தியில் கேட்டுப் போயுள்ளது. அது அதவிர ராசா குடும்பத்தின் கற்பழிப்பு, கொலை என்பன பற்றிய செய்திகளும் பூதாகரமாக வெளிப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து பொதுமக்கள் கவனத்தை திசை திருப்ப தற்பொழுதுள்ள ஒரே வழி இதுதான்.
அரச நிர்வாக முடக்கத்தால் பாதிப்பிட்குள்ளகியிருந்த ஒபாமா நிர்வாகம், தனது பணத்தடுப்பாட்டை நீக்க, அமெரிக்காவில் எரிபொருட்களின் விலையை அதிகரிக்க முயலலாம், அதற்கான ஒரு காரணமாக சொல்லுவதற்கு இந்த நாடகம் இரு தரப்பாருக்கும் தேவைப்படலாம்.
முஸ்லிம்கள் இதனை நம்பத் தேவையில்லை. பலஸ்தீனில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கொசுக்களைப் போன்று கொன்று குவிக்கப்பட்ட பொழுது, சவுதிக்கு வராத மனித உரிமை சபை மீதான கோவம், தற்பொழுது ஏன் வர வேண்டும்?????