கல்முனையில் புருனை நாட்டின் கொடி (படங்கள்)
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டையொட்டி தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் எம்.ரீ.வி நிறுவனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த வாகனப்பேரணி இன்று 2013-10-06 கல்முனை மாநகர் வந்தடைந்தது.
நண்பகல் 11.30 மணியளவில் வந்தடைந்த இவ்வாகனப்பேரணியை கல்முனை பஸ் தரிப்பிடத்திற்கு அருகாமையில் வைத்து பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல்.சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்.கல்முனை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமிpனி தென்னகோன் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வரவேற்றனர்.
இதன் போது புருனை நாட்டின் கொடி சம்பிரதாய புர்வமாக பிரதேச செயலாளர்களிடம் கையளிக்கப்பட்டு பின்னர் வாகனப்பேரணியில் தொங்கவிடப்பட்டது.
Post a Comment