கிழக்கு மாகாண காணி குழு ஒன்றை அமைக்கும்படி வேண்டுகோள் - மா.ச.உறுப்பினர்அன்வர்
2013.10.08ம் திகதி மு.ப 10.30 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி கலாச்சாரம் மற்றும் காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் விமல வீர திஸானாயக்க தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சுக்கான ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றது இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் புஸ்பகுமார மாகாண கல்விப் பணிப்பாளர் நிஸாம் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் கிழக்கு மாகாண காணி ஆணையளார் உதவி ஆணையாளர் மற்றும் காணி நிர்வாக திணைக்களத்தின் அதிகாரிகள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் உதுமான் லெப்பை தவிசாளர் ஆரியவதி கலப்பதி எதிர்க்கட்சித்தலைவர் தண்டாயுதபாணி கி.மா.சபை உறுப்பினர் அன்வர் மற்றும் எதிர்கட்சி ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் ஆசிரிய இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவேண்டும் எனவும் வெற்றிடங்களாக உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படவேண்டும் என்றும் முறையற்ற இடமாற்றத்தினால் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படுகின்றதென்றும் அமச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டதை அடுத்து கல்வி அமைச்சின் செயலாளர் பணிப்பாளரால் எதிர்வரும் 2014ம் வருடத்திலிருந்து முறையாக பேணப்படும் என்றும் அவ்வாறு காணி திணைக்களத்தின் விடயம் எடுத்துக்கொள்ளப்பட்ட மா.ச.உறுப்பினர் அன்வரால் கிழக்கு மாகாண காணி பொது தேவைகளுக்காக அல்லது மத்திய அரசினாலோ மற்றும் பூஜா பூமி படையினருக்கான முகாம்கள் அமைப்பதற்காண காணிகள் கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகள் பற்றி அமைச்சின் கீழுள்ள காணி ஆணையாளருக்கோ அல்லது அமைச்சருக்கோ தெரியப்படுத்தப்படுகின்றதா என்பது பற்றி மா.ச.உறுப்பினாரால் கேள்வி எழுப்பப்பட்டது பின்னர் பல விடயங்கள் அமைச்சருக்கோ காணி ஆணையாளருக்கோ தெரியாமல் இடம் பெறுகின்றது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது தற்பொழுது கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேச செயலகங்களிலும் மாவட்டச்செயலகங்களிலும் காணி சம்பந்தமாக மேற்படி நோக்கங்களுக்காக காணி பகிர்ந்தளிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது ஆனால் இந்தக்குழுவில் கிழக்கு மாகாண காணி ஆணையாளரைத் தவிர வேறு எவரும் உள்வாங்கப்படவில்லை என்றும் அவ்வர்று கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் தலைமையில் இவ்வாரான குழு அமைக்கப்பட வேண்டும் என்பதுடன் அக்குழுவில் அரசியல் பிரமுகர்களும் பங்கெடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் கிழக்கு மாகாணத்தில் காணிகள் கையகப்படுத்தும்போது மாகணத்தினுடைய பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் என்ன இடம் பெறுகின்றது என்பது பற்றி தெரிந்துகாள்ள முடியும் என்றும் கூறியதுடன் அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து அமைச்சர் விமல வீர திஸாநாக்கவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இதுசம்பந்மதமாக விரைவில் வேறு ஒரு தினதிதில் விசேட கூட்டம் ஒன்றை கூட்டி கிழக்கு மாகாணத்துகான குழு ஒன்றை அமைப்பதுடன் விசேட பிரச்சிணைகளை ஆராய்வதற்கு விரைவில் திகதி ஒன்றை அறிவிப்பதாகவும் சபையில் தெரிவித்தார் அத்தோடு ஆளும் எதிர்கட்சி உறுப்பினர் இன்று அவ்வாறான கட்டமைப்பு ஒன்று இல்லாததால்தான் புல்மோட்டை மற்றும் ஏனைய பிரதேசங்களில் மக்கள் வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அதுமாத்திரமல்லாமல் கடந்த யுத்தத்pனால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இந்தநாட்டில் ஜனநாயகத்துடன் வாழ வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை அந்தநோக்கத்திலிருந்து தவறிவிடக்கூடாது என்றும் மாகாண மக்களின் அபிலாசைகள் மதிக்கப்படவேண்டும் என்றும் மா.சபை.உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்
Post a Comment