ஜெமீலின் நிதி ஒதுக்கீட்டில் இலவச குடிநீர் இணைப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான.ஏ.எம்.ஜெமீல் அவர்களின் 2013ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் இருந்து சாய்ந்தமருது, நற்பட்டிமுனை, மாளிகைக்காடு, நிந்துவூர், சம்மாந்துறை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ் இலவச குடிநீர் பெற்றுக் கொள்ளும் வெளியூர் குடும்பங்களுக்கான பற்றுச்சீட்டினை தன்னுடைய காரியாலயத்திற்கு அவர்களை அழைத்து அசௌகரியப்படுத்தாமல்- நேரடியாக அவர்களது வசிப்பிடத்திற்கு சென்று வழங்குமாறு மாகாண சபை உறுப்பினரால் பணிக்கப்பட்டதன் பேரில் பயனாளிகளின் காலடிக்கு சென்று அப்பற்றுச் சீட்டுகள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வுகளில் மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் முனாஸ் முகைடீன் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் அரசியல் விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டு அவற்றை உரியவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் அவர்களின் 1000 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2006 ம் ஆண்டு முதல் இதுவரை 760 வறியகுடும்பங்களுக்கு இலவச குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் முனாஸ் முகைடீன் தெரிவித்துள்ளார்.
Post a Comment