அந்-நூர் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் தொடர்பாகவும் ஜனநாயகத்தின் பெறுமதியை பிரயோகரீதியில் இனங்காணுதல், கூட்டுவாழ்வு பரஸ்பர புரிந்துணர்வு பிரதேச மற்றும் தேசிய அபிவிருத்தியில் நேரடியாக பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குதல் தலைமைத்துவப் பண்புகளையும் ஆளுமைப்பண்புகளையும் விருத்தி செய்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்ட பாடசாலைகள் தோறும் மாணவர் பாராளுமன்றங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.
அட்டாளைச்சேனை அந்-நூர் மகாவித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் 22.102013 செவ்வாய்கிழமை அதிபர் யு.ஆ.ஆ. இத்ரீஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இத்தேர்தலில் மாணவர்கள் அனைவரும் மிக விருப்புடன் வாக்களிப்பில் ஈடுபட்டதுடன்;. இப்பாடசாலை மாணவர் பாராளுமன்றத் தேர்தலானது பொதுத்தேர்தலில் நடைமுறைகளை முற்றுழுதாக பின்பற்றப்பட்டது மிகவும் சிறப்புக்குரியதாக காணப்பட்டது.
இத்தேர்தலில் 95உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 150வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தெரிவ செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட இம்மாணவர் பாராளுமன்றத்தின் கட்டமைப்பு சபாநாயகர்,பிரதிசபாநாயகர்,பிரதி செயற் குழுத் தலைவர் பிரதமர் சபை முதல்வர், 10 அமைச்சர்கள் 10பிரதி அமைச்சர்கள் உசாத்தணை செயற்குழு சபை என்பவற்றைக் கொண்டதாக காணப்படும்.
முளையிலேயே நடிப்புப் பயிற்சியா?
ReplyDeleteஅநியாயக்காரர்கள்!! இப்பவே இதனைக் கொடுத்தால் எங்கே படிக்கப் போகிறார்கள்??
வகுப்பில் முட்டை எடுத்தாலும் அரசியலில் வெல்ல முடியும் என்ற எண்ணம்தான் மேலோங்கும்.
இங்கே புத்தியுள்ளவர்கள் யாருமில்லையா?????