Header Ads



குப்பைக்கு மூட்டிய தீயால் அருகில் இருந்த தென்னங்காணி முழுவதுமாக எரிந்து நாசமாகியது


(FAROOK SIHAN)

குப்பைக்கு மூட்டிய தீயால் அருகில் இருந்த தென்னங்காணி முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மதியம் 1:00 மணியளவில் ஆவரங்கால் நவோதயா வீதியில் இடம்பெற்றுள்ளது. இத் தீ பரவல் சம்பவத்தால் அப்பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாவது. அருகில் உள்ள காணிக்காரர் தனது காணியினை துப்பரவு செய்து தீ முட்டியுள்ளதாக கூறப்படுகிறது. தீ மூட்டியவர் மதியச் சாப்பாட்டிக்கு வீடு சென்றதாகவும். காய்ந்திருந்த புல்லில் பட்டு தீ அருகில் உள்ள தென்னங்காணிக்குள் பரவியுள்ளது. இதனை கண்ட அயலவர்கள் உடனடியாக தீ யினை அணைக்க முற்பட்டும் பாரிய தீயுடன் கூடிய புகை மண்டல் அதிகமாக காணப்பட்டதால் கண்எரிச்சலுடன் கூடிய தீயின் வெற்கை காரணமாக பரவிய தீயினை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் போது வீதி அபிவிருத்தி வேலையில் ஈடுபட்ட தனியார் தண்ணீர் பைஸர் மூலம் நீர் கொண்டுவரப்பட்டும் சதுப்பு நிலம் காரணமாக வாகனம் உட்செல்லமுடியாமல் போனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச் சம்பவத்தில் அதே பகுதியினை சேர்ந்த கந்தன்-கணபதி என்பவருடைய 15 பரப்புக்குள் காணிக்குள் காணப்பட்ட பயண்தரு நிலையில் இருந்த 85 தென்னம்பிள்ளைகள் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. யாழ் குடா நாட்டில் இப்படியான சம்பவம் ஒன்று இடம்பெற்றது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் தொடர்பாக காணி உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.



No comments

Powered by Blogger.