எருமை மாட்டுடன் மோதி, ஆசிரியர் மரணம்
மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காகப் பாய்ந்த எருமை மாட்டுடன் மோதுண்டு ஆசிரியர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
மண்டூர், தம்பலவத்தைக் கிராமத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியரான வேலாயுதம் அமிர்தமோனன் (வயது 22) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர், உடனடியாக களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இங்கு சிகிச்சை பெற்றுவந்த இவர் நேற்று வியாழக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டுக்கு வந்த தனது நண்பரை வழியனுப்பி வைப்பதற்காக அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வரும்போது மண்டூர், வெல்லாவெளியூடான வீதியில் எருமை மாடொன்று திடீரெனப் பாய்ந்து வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது.
இதன்போது வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எருமை மாட்டுடன் மோதியதில் தாங்கள் இருவரும் காயமடைந்ததாக இறந்தவரின் நண்பர் தெரிவித்தார்.
Post a Comment