'அல்லாஹு அக்பர்' முழக்கத்துடன் சாய்ந்தமருதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்..!
(ஏ.எல்.ஜுனைதீன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பீடம் தற்போதய மேயர் சிராஸ் மீராசாகிபை இன்று 31 ஆம் திகதியுடன் அவர் வகிக்கும் மேயர் பதவியை இராஜினாமாச் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருப்பதை அடுத்து நேற்று 30 ஆம் திகதி புதன்கிழமை இரவு சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர் புத்திஜீவிகள் பிரமுகர்கள் பொது மக்கள் என பெருந் திரளானோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் அரசியல் சுமூகத்திற்கான நான்கு தீர்மானங்கள் “அல்லாஹு அக்பர்” என்ற சபையினரின் கோஷங்களுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் அத் தீர்மானங்களை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் தலைவர் ஊடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு உடனடியாக அனுப்புவது என்றும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் கெளரவ தலைவர் அல்-ஹாஜ் வை.எம் ஹனிபா கல்முனை ஸ்ரீ சுபத்ராராம விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரத்ன தேரோ கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீராசாகிப் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம் .ஐ.எம்.பிர்தெளஸ் ஏ. நிஸார்தீன் ஏ.ஆர் அமீர் ஏ.எச்.எச்.எம்.நபார் கே.எம் முபீத் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக பிரதிநிதிகள் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம். உதுமாலெப்பை கல்முனை ஸாகிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மரைக்கார் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் முன்னாள் அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மரைக்கார் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கூடியிருந்த சபையினருக்கு ஒலி பெருக்கி மூலம் வாசித்து சபையினரின் “அல்லாஹு அக்பர்” என்ற கோஷங்களுடன் அங்கிகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.
இங்கு நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் பற்றிய விபரம் வருமாறு:-
தீர்மானம்-01
கல்முனை மாநகர சபையின் மேயராக சிராஸ் மீராசாகிப் தற்போது வகித்து வரும் பதவியில் குறித்த சபையின் இம் முறைக்கான ஆயுள் காலம் முழுவதும் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பீடம் அதன் ஒப்புதலையும் அங்கிகாரத்தையும் வழங்க வேண்டும்.
தீர்மானம்-02
தற்போது சாய்ந்தமருது ஊரின் அரசியல் அதிகார சுமுகத்திற்கு ஏற்பட்டுள்ள விரிசலையும் சவாலையும் எதிர்காலத்தில் பூரணமாக தவிர்த்துக் கொள்ளும் நல்லெண்ணத்தில் அடுத்து வருகின்ற உள்ளூராட்சிக்கான தேர்தலை சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி மன்றமாக நின்று சந்திப்பதற்கு எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம்-03
முப்பத்தி ஐந்து ( 35 ) ஆண்டுகளுக்குப் பிறகு சாய்ந்தமருதுக்கு கிடைத்த மாநகர முதல்வர் பதவியை (அரசியல் அந்தஸ்தை) சாய்ந்தமருது வாழ் மக்கள் நிரப்பமாக அனுபவித்துக் கொள்வதற்கு சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்துடன் சுமுகமாகப் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம்-04
சாய்ந்தமருது மக்களின் சமூக வாழ்வியலை நெறிப்படுத்துவதில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் மற்றும் மரைக்காயர் சபையினர் என்றும் தமது கடமையிலிருந்து விலகிப் போன சந்தர்ப்பங்கள் கிடையாது. தற்போது சாய்ந்தமருது ஊரின் அரசியல் அந்தஸ்து சந்தித்துள்ள நெருக்கடியிலிருந்து ஐதாக்கி இது குறித்த தீர்மானங்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு சாதகமான தீர்வை சாய்ந்தமருது மக்களுக்கு பெற்று தருமாறு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் நம்பிக்கையாளர் மற்றும் மரைக்காயர் சபையினரை மிகப் பணிவுடன் நாம் வேண்டுகின்றோம்.
இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சத்தியத்துக்கு (கொடுத்த வாக்குறிதிக்கு ) எதிராகவும் சாய்ந்தமருதுவின் கெளரவத்துக்கு எதிராகவும் பிரதேச வாதத்தை தூண்டும் இந்த கும்பலை சாய்ந்தமருது மக்களும் நம்பிக்கையாளர் சபையும் நிட்சயம் நிராகரித்து சத்தியத்தையும் கெளரவத்தையும் நிலை நாட்டுவார்கள் என நம்புகிறோம்.
ReplyDeleteஇந்த நாட்டின் முஸ்லிம்களின் அரசியல் பலம் இந்த கல்முனை தொகுதிக்கு உண்டு. இந்த பலத்தை பிரதேச வாதம் பேசி பலவீனப் படுத்த வேண்டாம் என எல்லா தரப்பையும் தாழ்மையுடன் வேண்டிக்கொகிறேன்.
அரசியல் ஜானம் தெரியாத தலைவர்களால் தான் இந்தசிக்கல்கள் ஏற்றபடுகிறது, தம்பி சிராஸ் பதவிப்பிரமாணம் எடுக்கும்போதே அவரிடம் ராஜினாமா கட்டிததையும் வாங்கி வைதிருக்கவேனும்.
ReplyDeleteபதவி யாரைத்தான் விட்டுவைத்தது, மேயராக சிரஸ் கண்ட இன்பம் மீண்டும் கிடைக்குமா? வெளிநாட்டு பயணங்கள் கொந்தராத்துகள், மாலைகள், மரியாதைகள், பந்தாக்கள் எல்லாம் மேயராக இருந்தால் உண்டு. அதை எந்த மடயந்தான் விட்டுக்கொடுப்பான். தலைவர் ஹக்கீம் , அரசியல் பாடம் நிறைய படித்து வரவேண்டும் அப்பதான், இப்படிப்பட்ட இழிவான எண்ணம் கொண்ட அரசியலில் ஆசைபடும் மேயர்களுக்கு பாடம் புகட்ட முடியும்.
தலைவர் அஷ்ரப் இருந்தால் தம்பி சிராஸ் எல்லாம் முன்னாள் நிற்க முடிமா??
யாரைத்தான் இந்த 'பதவி' ஆசை விட்டு வைத்தது. தலைவரும் பதவியைக் காத்துக் கொள்வதற்காகத்தான் எமது சமூகத்துக்கு எதிராக ஒரு பெரிய அணியே திறன்டு வந்திருக்கும் போது வாய் மூடி மௌனியாக இருந்து காலம் கடத்துகிறார். இதை நம்மவர்களில் சிலரும் கண்டுகொள்வதில்லை.....
ReplyDeleteயாரைத்தான் இந்த 'பதவி' ஆசை விட்டு வைத்தது. தலைவரும் பதவியைக் காத்துக் கொள்வதற்காகத்தான் எமது சமூகத்துக்கு எதிராக ஒரு பெரிய அணியே திறன்டு வந்திருக்கும் போது வாய் மூடி மௌனியாக இருந்து காலம் கடத்துகிறார். இதை நம்மவர்களில் சிலரும் கண்டுகொள்வதில்லை.....
ReplyDelete