வட்டமடு விவசாய பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் சந்திப்பு - பத்திரிகை செய்திக்கு அரசாங்க அதிபர் மறுப்பு
2013.09.28ம் திகதிய பத்திரிகை ஒன்றில் முற்பக்க செய்தியாக வெளிவந்த ' வட்டமடு மேய்ச்சல் தரைக்குள் உட்பிரவேசிக்க உடனடித்தடை – அரசாங்க அதிபர் அறிவிப்பு' என்ற செய்தியால் குழப்பமடைந்தனர் சுமார் 2000ஏக்கர் உத்தரவுப்பத்திமுள்ள வட்டமடு விவசாயிகள. இதனால் 2013.10.02ம் திகதி புதன் கிழமை அம்பாரை அரசாங்க அதிபரை அவரது காரீயாலயத்தில் நேரில் சந்தித்தனர.; இச்சந்திப்பில் ஓய்வு பெற்ற காணி அதிகாரியும், உள்ளுராட்சி மாகணசபைகளின் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளருமான ஏ.பி தாவுத் அவர்களின் தலைமையில் வட்டமடு,கிரின்லேன்ட்,கொக்குளுவ,முறானவெட்டி,வட்டமடு புதுக்கண்டம் ஆகிய வட்டைகளின் விவசாய குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர.; அப்போது மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பு செய்தியின் உள்ளடக்கம் பற்றி அரசாங்க அதிபர் நீல் டீ அல்வீஸ் அவர்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டபோது பின்வருமாறு அரசாங்க அதிபர் விளக்கமளித்தார்
அதாவது - திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள வட்டமடு வயல் பிரதேசம் கால் நடை மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் அந்த நிலப்பிரதேசத்திற்க்குள் யாரும் உட்புகுவதற்கோ வேறு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கோ உடனடித் தடை விதிப்பதாக நான் அறிவிப்பு செய்யவில்லை என்றும் அவ்வாறு கூறியதாக வெளிவந்த பத்திறிகை செய்து தவறானது என்றும் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,
கடந்த 2013.09.26ல் ஆலையடிவேம்பு,திருக்கோவில் கால்நடை பண்னையாளர் சங்க பிரதிநிதிகள்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே புஸ்பரசா, அம்பாரை பிரிவினா விகாராதிபதி வண. சம்மேந்த தேரர் அடங்கிய குழுவினர் தன்னை சந்தித்து 1976.09.16ம் திகதிய வர்த்தமானி அறிக்கை மூலம் 4000 ஏக்கர் மேய்ச்சல் தரையாக அறிவிக்கப்ட்டிருக்கின்றது என்றும் தற்போது இப்பிரதேசம் நில ஆக்கிரமப்பு செய்யப்படுகின்றது என்றும் இதனை பாதுகாக்க நடவடிக்கை எகடு;குமாறும் கோரி எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர் என்றும்
இதே நேரத்தில் அவசரகால சட்டத்தன் கீழ் 1976ல் வெளியான 4000 ஏக்கர் தொடர்பான வர்த்தமானி அறிக்கை பின் வந்த அவசரகால சட்ட நீக்கத்தினால் காலாவதியாகிவிட்டதனால் வர்த்தமானி அறிவித்தல் வலுவிழந்து விட்டது எனவும,; சட்டப்படி உத்தரவுப்பத்திரம் உள்ள நெற்காணி சொந்தக்காரர்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்கலாம் என்ற விடயமும் தனது கவணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
சுமுகமாக இடம் பெற்ற இச்சந்திப்பில் சட்டப்படி உத்தரவுப்பத்திரம் உள்ள காணியில் மிக நீண்டகாலமாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தொடரந்தும் ஒத்துழைப்பு வங்குமாறு வட்டமடு விவசாயிகள் கோரிக்கை விடுத்த திருப்தியோடு பத்திரிகை செய்தியால் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கி வழமைபோல் விவசாயிகள் தத்தமது விவசாய நடவடிக்கைகளை 2013.10.03ல் இருந்து மேற்கொள்ளத் தொடங்கினர.;
எஸ். எல். எம். உவைஸ்.
இணைப்பாளர்
வட்டமடு விவசாய சம்மேளனம்
அக்கறைப்பற்று
Post a Comment