'குரு பிரதீபா பிரபா' தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட சின்னப்பாலமுனை, பாலமுனை அக்/அல் - ஹிக்மா வித்தியாலய ஆசிரியரும் ஊடகவியலாளருமான கவிஞர் பி. முஹாஜிரீன் கல்வியமைச்சின் 'குரு பிரதீபா பிரபா' தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இவ்வருட ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழா கடந்த சனிக்கழமை (5ம் திகதி) மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கல்வியமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் தி.மு. ஜயரத்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி வைத்தார். கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களளும் கல்வியமைச்சின் உயரதிகாரிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
மஹிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு திட்டத்திற்கேற்ப எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் பரம்பரையொன்றை உருவாக்கும் முகமாக மிகப்பயன்மிக்க கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள், அதிபர்களால் ஆற்றப்படும் உன்னதமான அளவிலா சேவையைக் கௌரவித்து இத்தேசிய விருது வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. கல்வியமைச்சினால் மூன்றாவது தடவையாக இவ்விருதிற்கு அதிபர், ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியரான பி. முஹாஜிரீன் பாலமுனை அக்ஃஅல் - ஹிக்மா வித்தியாலயத்தின் தற்போதய பிரதி அதிபராகவும், இப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகவும் பாடசாலைக்காக அரும்பணியாற்றி வருவதுடன் பாடசாலையின் பல்வேறு பௌதிகவள மற்றும் முகாமைத்துவப் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதாகவும் இவருடைய 5 வருட குறகியகால ஆசிரியர் பணியில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தனது முழுப்பங்களிப்பினை வழங்கி வருவதாகவும் அதிபர் ஐ.எம். பாஹிம் தெரிவித்தார்.
தான் எடுத்துக்கொண்ட பணியை முழுமையாகவும் திருப்தியாகவும் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலும் நிருவாகத்திலும் முகாமைத்துவத்திலும் செய்ற்றிறனும் ஆளுமையுமிக்க இவர் எமது பாடசாலையின் வளர்ச்சியிலும் மாணவர்களின் கல்வி முயற்சியிலும் தியாகத்தடன் செயலாற்றி வரும் ஒரு ஆசிரியராவார். இவர் கல்வியமைச்சின் பெறுமதியான இக்கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்;பட்டமை பொருத்தமானதும் பாராட்டுக்குரியதுமாகும். இவ்விருது பெற்றமைக்காக இப்பாடசாலை சமூகம் அவரை வாழ்த்துகின்றது எனவும் அதிபர் ஐ.எம். பாஹிம் மேலும் தெரிவித்தார்.
அகில இலங்கை சமாதான நீதவானும், ஊடகவிலாளரும், கவிஞருமான ஆசிரியர் பி. முஹாஜிரீன் (முஹா) பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியில் சிறப்புச் சித்தி பெற்றுள்ளதுடன், பல்வேறு சமூக நலன்புரி சார் அமைப்புக்கள், கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் தலைவராகவும் ஆலோசகராகவும் மற்றும் பல முக்கிய பொறுப்புக்களிலும் சமூகப்பணியாற்றி வருகிறார். இவர் முகம்மது சரிபு புஹாரி – சாஹூல் ஹமீட் குழந்தையும்மா தமபதியரின் சிரேஷ்ட புதல்வராவார்.
Post a Comment