வெள்ளி விழாக் காணும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
(ஏ.எல்.ஜுனைதீன்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முன்னோடியான கல்முனைக்குடி பிரசவ விடுதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் 05ஆம் திகதி 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. கடந்த 25 வருடங்களில் இதன் துரித வளர்;ச்சியையும் மக்கள் சேவையையும் நினைவு கூறும் முகமாக வெள்ளி விழா வைபவங்கள் ஓழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கல்முனைப் பிரதேசத்தில் மேற்கத்தேய வைத்திய முறையிலான மருந்தகம் (தற்போதைய கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னோடி); முதன்முதலாக 1901ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டது.
மேற்கத்தேய வைத்திய முறையில் மக்களின் நாட்டம் அதிகாரித்ததைத் தொடர்ந்து இம்மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அரச மருந்தகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவ்வகையில் 1952 இல் சாய்ந்தமருதில் ஒரு அரச மருந்தகம் கட்டப்பட்டு இயங்கியது. இங்கு கடமையாற்றிய வைத்தியர் கல்முனைக்குடிக்கும் வாரத்தில் ஒரு முறை விஜயம் செய்து வைத்தியம் செய்தார். சில வருடங்களில் கல்முனைக்குடியிலும் நிரந்தரமாக ஒரு மருந்தகம் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த பட்டண சபை வீட்டுத் தொகுதியில் இயங்க ஆரம்பித்தது.
1980 இல் சாய்ந்தமருது மருந்தகத்துடன் பிரசவ விடுதியும் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வைத்திய சேவைகள் விஸ்தரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்முனைக் குடியிலும் ஒரு பிரசவ விடுதி அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அவ்வூர் மக்களால் முன்வைக்கப்பட்டது கலவரச் சூழல் காரணமாக இக்கோரிக்கை மேலும் வலுப்பெற்றதைத் தொடர்ந்து 1988ம் ஆண்டில் கல்முனை நாடாளுமன்ற.உறுப்பினர் கௌரவ அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் இங்கு பிரசவ விடுதி ஒன்றைக் கட்டுவது எனத் தீர்மானித்து அக்கால கட்டத்தில் கல்முனைக்குடி மத்திய மருந்தகப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிக் கொண்டிருந்த டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல் அவர்களின் ஒத்துழைப்புடன் பிரசவ விடுதி கட்டுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கினார்.
1988.11.05 ஆம் திகதி அக்காலப் பிரதம மந்திரி கௌரவ ஆர். பிரேமதாச அவர்கள் கௌரவ அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் (நா.உ.) அவர்களின் அழைப்பின் பேரில் இப்பிரசவ விடுதியைக் கோலாகலமாகத் திறந்து வைத்தார்கள். டாக்டர் எம்.ஐ.எம். ஜெமீல் இதன் முதல் பொறுப்பதிகாரியாக செயற்பட்டார்;. இதே வேளை கடற்கரையில் அமைந்திருந்த மத்திய மருந்தகத்தில் நடைபெற்று வந்த வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவை இங்கு மாற்றுவதில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. எனினும் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் முயற்ச்சியினால் திறப்பு விழா நடந்து ஓரிரு மாதங்களுள் இங்கு வெளி நோயளர் சிகிச்சையை ஆரம்பிப்பதற்கான அனுமதி பெறப்பட்டது. அவ்வேளை கௌரவ எம்.எச்.எம். அஷ்ரப் (நா.உ.) அவர்கள் அதனை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள்.
இங்கு ஆரம்பத்தில் குடும்ப நல உத்தியோகத்தராக கடமையாற்றியவர் ஐனாபா சம்சுதீன் ஆகும். அத்துடன் டாக்டர் எஸ்.ஆர்.ஏ.எம்.மௌலானா, டாக்டர் சிவஅன்பு, டாக்டர் எம்.எம்.லியாகத் அலி, மர்ஹும் டாக்டர் ஏ.றிஸ்வி ஆகியோரும் இங்கு ஆரம்பத்தில் கடமையாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 1990 களில் பயங்கரவாதம் காரணமாக இங்கு இரவில் வேலை செய்வதில் பல சிக்கல்கள் தோன்றியதால் பகல் வேளைகளில் மட்டும் சிகிச்சைகள் நடைபெற்றன இதன் காரணமாக 1994ம் ஆண்டின் பிற்பகுதி வரை இங்கு மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே வழங்கப்பட்டு வந்தன.
1994ம் ஆண்டின் பிற்பகுதியில் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் அவர்கள் இவ்வைத்தியசாலையைப் பொறுப்பெடுத்ததை; தொடர்ந்து இது மிக வேகமாக அபிவிருத்தியடையத் தொடங்கியது. 1995இல் சுற்றயற் கூறாகவும் 1996 இல் மாவட்ட வைத்திய சாலையாகவும் 1999இல் ஆதார வைத்திய சாலையாகவும் தரம் உயாத்ததப்பட்டு பின்னர் 2002ம் ஆண்டு அஷ்;ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று ஒரு பொது வைத்தியசாலை வழங்கும் சேவைகளைச் சிறப்பாக வழங்கி வருகின்றது.
1995ஆம் ஆண்டிலிருந்து 2000 ஆண்டு வரையான துரித அபிவிருத்திக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்எம். அஷ்ரப் அவர்களினது பங்களிப்புடன் அக்கால கட்டத்தில் இயங்கிய வைத்திய சாலை அபிவிருத்தி சபையின் செயற்பாடுகள் மிக உன்னதமானது. அதன் உறுப்பினர்கள் இப்பிரதேச மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள். அவர்களில் விசேடமாக டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் அவர்களின் தலைமைத்துவமும் மர்ஹும் டாக்டர் ஏ.எல்.எம்.ஜெமீல் அவர்களின் வழிகாட்டல்களும் ஜனாப் எச்.எம்.எம். அமீர் அலி அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கது.
2000 ஆம் ஆண்டின்; பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்.எச்எம். அஷ்;ரப் அவர்களினது அகால மரணத்தைத் தொடாந்து அமைச்சர் பேரியல் அஷ்;ரப் அவர்களினதும் கல்;முனை நா.உ. எச்.எம்.எம்.ஹரிஸ் அவர்களினதும் மற்றும் பல அமைச்சர்கள். நாடாளுமன்ற உறுப்பனர்களின் உதவியுடனும் வைத்திய சாலை அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடனும், இவ்வைத்தியசாலை மேலும் அபிவிருத்தியடைந்தது. 2002 இல் மேலும் தரமுயர்த்தப்பட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இவ் அபிவிருத்தியிலும் சுனாமியின் பின்னரான பாரிய அபிவிருத்தி வேலைகளிலும் தற்கால வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எ.எல்.எம். நஸீர் அவர்களினதும் டாக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் அவர்களினதும் அவர்களோடு இணைந்து செயலாற்றிய டாக்டர் ஆபிதா கையூம், டாக்டா எம்.எஸ்.ஜெசீலுல்இலாகி, டாக்டா எம்.சீ;.எம். மாஹிர் போன்றோரினதும் வகிபங்கு மிகவம் பாராட்டுக்குரியது. இவர்க்ள் அனைவரும் இப்பிரதேச மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் இவ்வைத்திய சாலையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய மற்றும் சேவையாற்றும் வைத்தியர்கள், தாதிமார்கள், பல்வேறு உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரின் உன்னத சேவைகள் இவ்வைத்தியசாலை தென் கிழக்குப பிராந்தியத்தில் முதல் தரமாக மிளிர்வதற்க்கு முக்கிய நடிபங்கை வழங்கியுள்ளது. இவர்களும் இப்பிரதேச மக்களின் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர்கள்.
எதிர்காலத்தில் இவ்வைத்தியசாலை பாரம்பரிய சிகிச்சை முறைகளுக்கு மேலதிகமாக இப்பிரதேச மக்களின் தேவைகளையும், அபிலாசைகளையும,; சிக்கல்களையும்; குறைகளையும் கண்டறிந்து ,புதிய பொறிமுறைகளுடன் கூடிய நவீன சிகிச்சை வசதிகளை மக்களுக்க வழங்க முன்வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றpனர்.
Post a Comment