Header Ads



வாஸ் குணவர்தன, சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். மாலபேயில் அமைந்துள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மாணவரான நிப்புண ராமநாயக்கவை கடந்த 2009ம் ஆண்டு பொலிஸ் குழுவைக் கொண்டு கடத்தி இத்தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் குறித்த முடிவை கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சகாப்தீன் அறிவித்தார்.

இதேவேளை, பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் இருவர் அரச தரப்பு சாட்சியாளர்களாக மாறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதனால் அவர்கள் இருவரும் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மேலும் ஏழு சந்தேகநபர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தர் மொஹமட் ஷியாமின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வாஸ் குணவர்தன இன்று நீதிமன்ற விசாரணைகளுக்காக ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.