Header Ads



ஊவா, மேல், தென் மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் உறுப்புரிமையை பாதுகாக்க..!

கடந்த செப்டெம்பர் 21ம் திகதி நடைபெற்ற தேர்தலில் மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் சமூகத்திற்கு நமது நாட்டு மாகாணசபைத் தேர்தல் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது. கலைக்கப்பட்ட மத்திய மாகாணத்தில் இருந்த ஏழு பிரதிநிதித்துவம் மூன்றாகவும், வடமேல் மாகாணத்தில் ஆறு மூன்றாகவும்  குறைந்துள்ளன. வடமாகாணத்தைப் பொருத்தவரை ஓரளவு திருப்தியான நிலை காணப்படுகின்றது.

நடந்து முடிந்த வடக்கு, மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக மதிப்பீடு செய்கின்ற கலந்துறையாடலொன்றை தேசிய மக்கள் இணைவாக்க ஐக்கிய மன்றம் UCNC கண்டி வைட் ஹவுசில் ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சித்திக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய சகோதரத்துவக் கூட்டமைப்பு UBA, ஸ்ரீ லங்கா இஸ்லாமியப் பேரவை SLIC மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தத் தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்குப் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கின்றது என்று அமர்வில் கலந்து கொண்ட அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதுடன். இதற்கு காரணங்களாக இந்தத் தேர்தலில் முஸ்லிம்களை வழிநடாத்தக்கூடிய எந்தவொரு அமைப்பும் செயலாற்றாமல் இருந்ததும், வேட்பாளர்கள் காலத்திற்கொவ்வாத பிரசாரங்களை முன்னெடுத்ததும், சில கட்சிகள் முஸ்லிம் பிரதிநித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு மேற் கொண்ட சதி நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் தமது பிரதிநிதித்துவத்தை அதிகரித்துக் கொள்ளுகின்ற நோக்கில் தமது வாக்குகளைப் பதிவு செய்யாமல் சில வேட்பாளர்களுக்கு வாக்குகளை அள்ளிக் கொட்டியதும் இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்தவத்தை பாரியளவில் இழப்பதற்குக் காரணங்களாக அமைந்திருந்தன.

இந்த நிலமை வருகின்ற ஊவா, மேல், தென்  மாகாண சபைத் தேர்தல்களில் நடக்காமல் இருப்பதற்கு குறிப்பிட்ட பிரதேசங்களில் மாவட்ட ரீதியிலான விழிப்புக் கூட்டங்களை நடத்துவதற்கு மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சமூக நலன் கருதி இந்த நடவடிக்கைகளுக்கு உதவ வேண்டும் என்று ருஊNஊ யின் செயலாளர் நளீர் அங்கு கேட்டுக் கொண்டார். இந்த நடவடிக்கைளில் இணைந்து செயலாற்ற விரும்புகின்றவர்கள்  செயலாளர், UCNC 129/2/6 D.S. . சேனாநாயக்க வீதி, கண்டி  என்ற முகவரியுடன் அல்லது info@ucnclk.net  என்ற முகவரியுடனோ அல்லது 0777275758 0112332118 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். 

அத்துடன் பொது நோக்கில் எம்முடன் இணைந்து செயலாற்ற விரும்புகின்ற தனி நபர்கள், அமைப்புக்கள் புத்திஜீவிகளும் இந்த அமைப்பில் உள்வாங்கிக் கொள்ளப்பட இடமளிப்பதற்கும் கண்டி வைட் ஹவுஸ் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 


No comments

Powered by Blogger.