சினிமாவின் பாதிப்பில் இலங்கை வாழ் முஸ்லிம் இளைஞர்கள்..!
(பெற்றோர்களின் நலன் கருதி முஹம்மது ஜீஷானின் அசீரின் ஒரு மடல்).
சினிமாவினால் நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டதோ இல்லையோ தவறான முன்னுதாரணங்கள் நிறைய சொல்லப்பட்டன .அன்றைய கால சினிமாவில் கதையின் போக்கின் நடுவில் சிறிதாய் காதல் பகுதி வரும் இன்றைய காலகட்டத்தில் முழுக்க முழுக்க காதல் மட்டுமே கதையாய் இருக்கிறது.முதலில் காதல் என்ற பெயரில் பலதரப்பட்ட காதல்களை சொன்னார்கள்.ஓர் இளம்பெண் வயதானவரை காதலிப்பது அதே வயதானவரின் மகன் அப்பெண்ணின் அம்மாவை காதலிப்பது என ஆரம்பித்து பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதே காதல் செய்யவும் காதலை சேர்த்து வைக்கவும் என்று சில பெற்றோர்கள் நினைத்து அச்சப்படும் அளவிற்கு பாடசாலை மாணவர்களை சித்தரித்து படம் எடுத்தார்கள்.அதில் அவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் செயல்படுவது போலவும் காட்டியிருப்பார்கள்.இதனால் சில மாவட்டங்களில் பலர் தங்கள் மகன் அல்லது மகளை பாடசாலையில் சேர்க்கவே பயந்தனர்
அடுத்தபடியாக மதம் மாற்றி காதல் செய்வதை கையில் எடுத்தனர் இவர்கள் அவ்வாறு படங்கள் வந்தவுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த கலப்புத் திருமணங்கள் நிறைய நடக்கத் தொடங்கின.அப்படி கலப்புத் திருமணம் செய்து வைப்பது தங்களது கடமை என்று நம்பிய நண்பர்களாலும் சினிமாவினாலும் தங்கள் காதல் வயப்பட்டிருக்கிறோமா என்பதை கூட அறியாமல் திருமணங்களை முடித்துவிட்டு பிரிந்த ஜோடிகள் ஏராளம்.
சரி இவையெல்லாம் 90 க்கு முன் நடந்தவை இப்பொழுது இச்சினிமா உலகம் கையில் எடுத்துள்ளதோ நாளைய தூண்களான இளம் மாணவசெல்வங்களை.சிறு வயது காதலர்கள் ,சிறு வயதில் நாயகியை ஆசிரியர் அடிப்பதிலிருந்து காப்பாற்றினால் காதல் , நாயகி நாயகனுக்காக பொய் சொன்னால் காதல் , நாயகியை கிண்டல் செய்துகொண்டே இருந்தால் காதல் என காதல் துவங்கும் இடம் இதுதான் என்றில்லாமல் எல்லாவற்றிலும் காதல் காதல் என்று இயல்பாய் சிறுவர் சிறுமியரிடம் இருக்கும் நட்பை கொச்சைப்படுத்துகின்றனர்.ஆண் பெண் பேதம் மறந்து நட்பை மட்டுமே காணத்தெரிந்த சிறுவர்களின் மனதில் எவ்வளவு எளிதாக விஷத்தை கலந்துவிட்டனர்.காவிய படம் எடுத்தேன். தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லைக் கொடுத்தேன். எனச்சொல்பவர்கள் சற்று உலகலாவிய பாடசாலைகளின் பக்கம் சென்று பாருங்கள் உங்கள் படங்களைக் காணும் சிறுவர் சிறுமிகள் தேவையில்லாத மாயையில் சிக்கிக்கொண்டிருப்பதை.பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள், மாணவிகளைக் கவர படங்களில் வருவதுபோல் ஓடும் பேருந்தில் ஏறுவதும், சத்தமாக பேசிக்கொண்டு வருவதும் ,வீரன் என்று காட்ட படங்களில் வருவதுபோல் வீண் சண்டைக்குப் போவது எனப் பெரும்பாலான மாணவர்கள் படிப்பையும் நட்பையும் சந்தோசத்தையும் அனுபவிக்க வேண்டிய வயதில் வீணாய்ப் போகின்றனர்.
விக்கிபீடியாவில் ஓர் கருத்து
A study conducted in 2006 found that adolescents who were more exposed to sexuality in the media were also more likely to engage in sexual activity themselves.
According to Time, "teens exposed to the most sexual content on TV are twice as likely as teens watching less of this material to become pregnant before they reach age 20 .
2006 லேயே இப்படி என்றல் இன்று கேட்க வேண்டுமா?.
காதல் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கும் சினிமா போதாது என்று , இப்பொழுது தொலைக்காட்சிகளும் தங்கள் பங்கிற்கு இளைஞர்களிடையே காதலை பரப்புகின்றது அவையும் பள்ளி மாணவர்களை குறி வைக்கின்றன.வருங்காலத் தூண்கள் தங்கள் நாட்டிற்குத் தேவையானதை விட காதலைப்பற்றியே அதிகம் தெரிந்துகொள்கின்றனர்.
அடுத்தது இன்னும் மோசம் ஓர் இளைஞன் மனம் சங்கடப்பட்டால் அல்லது சோகப்பட்டால் உடனே அதற்குத்தேவை மது,அது காதல் தோல்வியாய் இருந்தாலும்.நண்பர்களுக்குள் சந்தோசத்தை கொண்டாட வேண்டுமா உடனே மது குடிக்க வேண்டும்,அல்லது துக்கத்தை பகிர்ந்துகொள்ள வேண்டுமா அதற்கும் மது தான்.இப்படி இளைஞர்களை எல்லா வகையிலும் கெடுத்துக்கொண்டு இருக்கிறது சினிமா.ஏன் நண்பர்கள் சந்தோசத்தை ஓர் கருணை இல்லத்தில் கொண்டாட முடியாதா, அல்லது ஓர் ஆதரவற்றோர் இல்லத்தில் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது போல் படம் எடுக்கக்கூடாதா,ரத்த தானம்,சமூக சேவை என்று இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன.
நமது நாடு இருக்கும் நிலையும் அதனிலிருந்து மீண்டு வருவதற்கான வழியும் சொல்லி , இளைஞர் மனதில் லஞ்சம் , ஊழலுக்கு எதிரான ஆவேசத்தையும் போராட்டத்தையும் எழுப்ப வேண்டிய ஊடகங்கள் ஆவேசத்திற்குப்பதில் ஆபாசத்தையும் , வழிமுறைகளுக்குப்பதில் வன்முறைகளை மட்டுமே காட்டிக்கொண்டிருப்பது வேதனையான ஒன்று . இந்த நிலை மாற நாம் நம் சிறுவர்களுக்கு தொலைக்காட்சியையும் சினிமாவையும் காட்டாமல் இலங்கையின் வரலாறையும் இன்றைய நிலையையும் அதை மாற்ற வேண்டிய வழிமுறைகளையும் சிறு வயதிலிருந்தே பழக்க வேண்டும்.ஆம் பசுமரத்தில் தான் ஆணி நன்கு பதியும்.
சற்று பார்ப்போம் இன்றைய இளைஞர்களின் காதலை. நிஜத்தில் நடப்பது என்ன எமது முஸ்லிம் சமூகம் கேவலாமான ஒரு சமூதாயமாக மாறுகிறது. இவ்வளவு நேரம் சினிமாவால் ஏற்படும் பிரச்சினைகளை பற்றி கூறினேன். இப்பொழுது சமூகவலைத்தளங்களிலும் என்ன நடக்கிறது அங்கேயும் அந்த காதல்தான் , தனியார் கல்வி நிலையங்களிலும் காதல், பாடசாலையிலும் காதல் என்னதான் நடக்கிறது ஒன்றும் புரியவில்லை . ஒரு பெண் தனியாக தைரியமாக இப்போழுது தனியார் கல்வி கூடத்துக்கோ, பாடசாலைக்கோ போக முடியுமா இந்த ஊரில் போகும் இடமெல்லாம் ஆண் பிள்ளைகள் கேலி செய்வதும் ,தான் விரும்பும் பெண்னுக்கு காதல் கடிதம் ,காதல் பரிசு குடுப்பதும் ஆயிற்று. பெற்றோர்கள் இதை கவனிப்பதும் இல்லை ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள். அது மட்டுமா பெற்றோர்கள் செய்யும் பிழையை எங்கு சென்று கூறுவது . தாயோ,தகப்பனோ,மாமனோ,மச்சானோ வெளிநாடு சென்று இருந்தால் மாத்திரம் போதுமானது அப்பருவ பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் இருந்து புதிய புலக்கத்தில் உள்ள கையடக்க தொலைபேசி , முக்கியாக அதுவும் VIDEO பாடல்கள் Mobile Games எல்லம் பார்க்க கூடியதை அனுப்பி வைக்கிரார்கள். அதன் பி்ன்னர் என்ன ஆட்டம்தான். தவறான இலக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடுவர்,ஆரம்பத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வர் பிரகு புகைப்படங்களை அசிங்கமாக பகிர்ந்து கொள்வார்கள் இப்படி பல விடயங்களில் ஈடுபட்டு மன உளைச்சலுக்கு ஆளாகுகிரார்கள் கடைசியில், . பெற்றோர்களே இந்த தவறை செய்து விட்டீர்களா? சற்று ஆராய்ந்து பாருங்கள். கட்டாயமாக இதை படிக்கும் பெற்றோர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் உங்களது பிள்ளைகளிடம் ,தங்கை,தம்பி களிடம் சென்று கையடக்க தொலைபேசியை வாங்கி ஆராய்ந்து பாருங்கள் நான் சொல்வது உன்மையா , போய்யா என்று...
முக்கியமாக Phone Message (Inbox,Sent,Saved Message)
Internet History (check Unwanted Websites)
Check Social Networks (Whatsapp,Fb Chatting Inbox,Fring,Skype,Viber mre Etc…)
இதை செய்யும் போது திடிரென சென்று பரிசோதியுங்கள் இல்லாவிடில் தப்பித்துக் கொள்வதற்காக ஆயத்தமாகி விடுவாகள்.
இந்த விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சில வழிமுறைகள்:
1.நேரத்தோடு எழும்பும் உங்கள் பிள்ளை தாமதமாகி எழுகின்றதா.
2.நேரத்தோடு சாப்பிடும் பிள்ளை சாப்பிடாமல் இருக்கின்றதா.
3.முகத்தில் இருக்கும் புன்னகை குரைந்து விட்டதா.
4.கூடுதலாக தனிமையை விரும்புவர்.
5.உங்கள் குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள்
6.படிப்பதற்காக நேரம் ஒதுக்க மாட்டார்கள.
7.தனிமையில் புழம்பி கொண்டு இருப்பார்கள்
8.படிக்கும் புத்தகத்தை ஏதோ ஏதொ எல்லாம் எழுதி வைத்து இருப்பார்கள்.
9.கவிதை மலை பொழியும்
10.இரவில் உறங்குவது போன்று நடிப்பார்கள்
இது போன்ற பிரச்சினைகள் உங்கள் பிள்ளையிடம் இருந்தால் அத்தகைய உரையாடலைத் தொடங்கும் முன் நீங்கள் சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டியதும் அவசியம்.
உங்கள் பிள்ளைகளிடம் இவ்விடயத்தை பற்றி, கதைப்பதிற்கு பதைபதைக்காதீர்கள். பேச்சை மாற்றாதீர்கள். ‘வயசுக்கு மீறிப் பேசாதே’ எனக் கண்டிக்காதீர்கள். பொய்யான பதிலையும் தராதீர்கள். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் பிள்ளைகளிடம் அவர்களது பிரச்சினைகளை பற்றி பேச்சைத் தொடருங்கள். நேர்மையாகவும் கண்ணியமாகவும் விளக்கம் அளிக்க முயற்சி செய்யுங்கள்.
அப்படிப் பேசும் போது லெக்சர் அடிக்கிற தொனியில் நீங்கள் நினைப்பதை மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் உங்கள் பிள்ளைகள் தரப்பு கருத்துக்களையும் கேட்டறியுங்கள். அந்த விஷயங்கள் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும் என்றும், என்ன நினைக்கிறார்கள் என்றும் கேளுங்கள். மேலும் அவர்களுக்கு எந்த நோக்கில் ஆர்வம் இருக்கிறதோ அந்த நோக்கில் பேச்சைத் தொடருங்கள். அப்போதுதான் அவர்கள் ஏதேனும் தவறாகப் புரிந்து கொண்டிருந்தாலும் உங்களால் சரிப்படுத்த முடியும். நீங்கள் விவாதிக்கிற விஷ யங்கள் குறித்து அவர்களுக்கு ஏதேனும் வருத்தங்கள் உண்டா என்பதையும் கேட்டறியுங்கள்.
அவர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டாவிட்டாலும் இவ்விஷயங்களைப் பற்றி அவ்வப்போது அவர்களிடம் உரையாடினால் அவர்கள் தவறான தகவலை பெற்றுவிடுவார்களோ என அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் மறுபடி யும் பேசும்போது அந்தத் தவறுகளை சரி செய்யலாம். நாளை அவர்கள் இதே விஷயங்களில் தவறு செய்வதையும் தவிர்க்கக்கூடும்.
கடைசியாக ஒரு விஷயம்...
பிள்ளைகளிடம் உடலுறவு பற்றிப் பேசுவதாலேயே அவர்கள் அந்த விஷயத்தில் ஆர்வமாகி விடுவார்களோ என்கிற பயம் வேண்டாம். உங்களைத் தவிர வேறு யார் அவர்களுக்கு அவற்றையெல்லாம் மிகச் சரியாக போதித்து விடுவார்கள்!
உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை எப்படியெல்லாம் கண்காணிக்கலாம்? அது அடுத்த ஜீஷானின் மடலில் !
Post a Comment