முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை சகல மதத்தலைவர்களும் பேசித் தீர்க்க வேண்டும் - கோத்தாபய ராஜபக்ஷ
(Tn) இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் மத ரீதியிலான மோதல்கள் இடம்பெறுகின்றன. அமெரிக்காவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழும் பகுதியில் உள்ள பெப்ரிஸ்ட் கிறிஸ்தவ தேவாலயங்களை அங்குள்ள வெள்ளையின மதவாதிகள் சேதப்படுத்தி வருகிறார்கள். அதுபோல் இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் இத்தகைய மதவாத வன்முறைகள் இடம்பெறுகின்றன.
எனவே, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சில வன்முறைகளை கண்டிக்கும் அதே வேளையில், இவற்றை சகல மதத்தலைவர்களின் ஒத்துழைப்புடன் சமாதானமாக தீர்த்து வைப்பதன் மூலமே பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவு எடுக்க முடியும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக சில பெளத்த அமைப்புகள் அச்சுறுத்தல்களை புரி கின்றனவே இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவென்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டதற்கு 23-10-2013 பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்ட பதிலை அளித்தார்.
கொழும்பு கிராண்ட்பாஸில் சமீபத்தில் இந்த வன்முறை ஆரம்பித்ததென்று கூற முடியாது. 1980களிலும் 1990களிலும் இவை இடம்பெற்றுள்ளன. இத்தகைய பிரச்சினைக்கு இருபக்கங்கள் உள்ளன. அவற்றை நாம் ஆராய்ந்து பார்த்து பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
Post a Comment