'இளம் வயதில் கருத்தரித்தலும், அதனால் ஏற்படும் விளைவுகள்' தொடர்பில் அறிவூட்டும் நிகழ்வு
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினர் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த 'இளம் வயதில் கருத்தரித்தலினால் ஏற்படும் விளைவுகள்' எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வூட்டும் நிகழ்வொன்று நேற்று வியாழக்கிழமை மாலை புதிய காத்தான்குடி அப்றார் டவுன் பல்நோக்கு மண்டபத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் 'முன்னோக்கிய பாதை' எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வில் 'இளம் வயதில் கருத்தரித்தலும் அதனால்; ஏற்படும் விளைவுகள்' எனும் தலைப்பில் காத்தான்குடி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன், 'ஆட்கொல்லி டெங்கு நோயும் ஆரோக்கியமான வாழ்வும்' எனும் தலைப்பில் காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.ஐ.றஹ்மதுல்லாஹ் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
இதன்போது புதிய காத்தான்குடி 167பீ கிராம சேவகர், இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை தொண்டர் இணைப்பாளர் எம்.ஐ.எம்.சலீம், செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடிக் கிளை தொண்டர் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment