வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும், சிங்களவர்வரும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
(எம். எஸ். பாஹிம்)
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் இன்று (31) பிற்பகல் 3.30 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் உள்ள தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் சகோதரத் துவ அமைப்பின் ஏற்பாட்டாளரும் முன்னாள் எம்.பி.யுமான மொஹமட் முஸம்மில், எம். எப். எம். பரூத் மெளலவி, உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த முஸம்மில் எப்போது இஸ்லத்திற்கு வந்தார்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
ReplyDeleteவெளியேற்றப்பட்ட எந்த முஸ்லிமும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை. அரச அலுவலகங்களில் இருந்து பலவந்தமாக அழைத்து வரப்படும் கீழ் நிலை ஊழியர்களும், கூலிக்கு அழைத்து வரப்படும் கூத்தாடிகளும் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
ReplyDeleteஇந்த முசம்மில் போன்றவர்களுக்கெல்லாம் வடக்கு மக்களைப் பற்றி பேச எவ்வித தகுதியும் இல்லை.
Riyas Ahamed அவர்களே யாரானாலும் நல்லது செய்கையில் பாராட்டாவிட்டாலும் வக்கனையுடன் நக்கல் அடிக்காமல் இருக்கலாமே? வடமாகாண முஸ்லிம்களின் அவளநிலமைகள் குறித்து இவரை தவிர யார் இன்று முன்வந்து பேசி இருக்கிறார்கள்? 23முற்று பெறும் அந்த மக்களின் அவல நிலமைகுறித்து யாழ்பாணத்தை சேர்ந்த அஸ்மின் ஐயுப் அவர்களே உண்மையான அக்கரையுடன் இப்படி ஓர் ஆர்பாட்டத்தை ஏட்பாடு செய்திருக்க வேண்டும் அவர் அதை மறந்து யாழ்பல்கலைகழத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் அரச உளவுப்படையின் நிகழ்ச்சி நிரலின்படி இயங்கிகொண்டிருக்கின்றார்களோ என்று சந்தேகத்தை வெளிப்படுத்தி அந்த மாணவர்களை அவமானபடுத்துகிறார் இந்த நிலமையில் இந்த மக்களுக்கு குரல் யார் கொடுத்தாலும் கொஞ்சம் பாராட்டாவிட்டாலும் வக்கனையாக நையாண்டி பண்ணாமல் இருகலாமே? யாழ் முஸ்லிம் இணையதளமே நடக்கும் ஆர்பாட்டத்தின் புகைப்படங்களை வெளியிடுங்கள் அகதிகள் கழந்துகொண்டார்களா இல்லையா என்பது விளங்கட்டும்
ReplyDelete23 வருடங்களாக (வடக்கு முஸ்லிம்களை மட்டுமல்ல) முஸ்லிம்களைப் பற்றியே கவலைப் படாமல், முஸ்ளிம்களுக்கும், பர்தா, ஹலாளுக்கும் எதிராக செயற்படும் ஒருவர், தனது அரசியல் நலனிற்காகவும், தனது எஜமானர்களின் மனக் குளிர்ச்சிக்ககவும், வடக்கில் ஏற்பட்டு வரும் தமிழ் முஸ்லிம் நல்லுறவை குலைப்பதற்காகவும் போடும் கோமாளிக் கூத்துக்கு எப்படி ஆதரவு வழங்க முடியும்?
ReplyDeleteயாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சில வெளியூர் மாணவர்களுடன் நட்புடன் பழகும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள், குறித்த மாணவர்கள் அறியாமலே அவர்களை புலனாய்வு நடவடிக்கைகளுக்கு தகவல் பெறுவதற்காக பயன்படுத்துவதாக யாழ்ப்பாண தமிழ் மாணவர்கள் மத்தியில் ஒரு கருத்து உள்ளது. அதே போன்று யாழ்ப்பணத்தில் தங்கி, யாழ் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சில முஸ்லிம் மாணவர்களுடன் இராணுவ அதிகாரிகள், புலனாவயுப் பிரிவினர் நண்பர்கள் போன்று பழகுவதும் நடைபெற்று வருகின்றது. ஆகவே, அஸ்மின் அய்யூப் அவர்களின் கருத்து, அங்கு நடைபெற்று வரும் ஒரு விடயத்தை பிரதீபளிக்கின்றதே தவிர, வீணான சந்தேகத்தை வெளிப்படுத்தவில்லை.
ஜனாப் அய்யூப் அஸ்மின் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அயராது பாடுபட்டு வருவதால், ஒரு நாள் ஆர்ப்பாட்டம் என்று போட்டோவுக்கு முகம் காட்டும் வேலையை செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை.
நீங்கள் கேட்டுக் கொண்டது போன்று, யாழ் முஸ்லிம் ஆர்ப்பாட்டம் தொடர்பான புகைபப்டங்களை வெளியிட்டால், அதில் இருக்கும் அகதிகளை நீங்கள் அடையாளம் காட்டுவதனை பார்க்க நான் ஆவலோடு காத்திருகின்றேன். ஏனெனில், நானும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன், ஆகவே, முகங்களை அடையாளம் கண்டுகொள்ள இலகுவாக இருக்கும்.