Header Ads



காத்தான்குடி கடற்கரை வீதியில் காபட் இடும் பணி ஆரம்பம்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள்; அதிகம் பயன்படுத்தும் பிரதான வீதிகளில் ஒன்றான காத்தான்குடி கடற்கரை பிரதான வீதியில் தற்போது காபட் இடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

குறித்த வீதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இததை; தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்,

சுனாமி மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் சேதமடைந்த நிலையில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த குறித்த காத்தான்குடி கடற்கரை வீதி,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 7 கோடி ரூபா செலவில் கார்ப்பட் வீதியாக நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது குறித்த வீதிக்கு காபட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடற்கரை வீதி ஆரம்பத்திலிருந்து முடியும் வரைக்கும் காபட் மிக விரைவில் துரித கதியில் போடப்பட்டு மக்களின் பாவனைக்கு முழுமையான காபட் வீதியாக அமைத்துக் கொடுக்கப்படும் எனவும் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

குறித்த வீதி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் ஜப்பானிய ஜெய்கா திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான நிதியொக்கீடு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.