யாழ்ப்பாணம் புதிய சோனகத்தெரு அடைமழை வெள்ளத்தினால் பாதிப்பு (படங்கள்)
(பா.சிகான்)
யாழ் புதிய சோனகத்தெரு பொம்மைவெளி மக்கள் குடியிருப்பு அண்மையில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமசேவகர் பிரிவு 88 இல் உள்ளடங்கும் இப்பிரதேசம் வருடா வருடம் பெங்யும் மழையினால் அடிக்கடி பாதிக்கப்படும் பிரதேசமாகும்.
இதனால் அங்கு வாழும் மக்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்து உறவினர் வீடுகளிலும்,யாழ் ஒஸ்மானியா கல்லூரியிலும் தஞ்சமடைவதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் பள்ளமாக காணப்படும் மேற்படி பிரதேச சூழல் மேலும் மழை பெய்தால் முழ்கும் அபாயம் உள்ளது.
இது தவிர இங்குள்ள மக்கள் வெள்ளநீர் தேக்கத்தினால் சுகாதார சீர்கேட்டினை எதிர் கொள்வதையும்,நுளம்புத்தொல்லைக்கு முகம் கொடுப்பதையும் காணமுடிகிறது. எனவே இப்பிரதேச மக்கள் நலனில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் அதிகாரம் மாகான சபையின் கீழ் வருகின்றதா என்று தெரியவில்லை.
ReplyDeleteயாழ் மாநகர சபையில், பிரதி மேயர் உட்பட 5 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தும், வருடாவருடம் வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை, ஆகவே புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் அஷெய்க் அஸ்மின் அய்யூப் அவர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி ஒரு முன்மாதிரியான செயல்பாட்டை அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.
(இதனை மாகாண சபை உறுப்பினர் அவர்கள் பார்ப்பாரா என்று தெரியவில்லை, பார்ப்பவர்கள் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவும்)