கிராம பிரச்சினைகளை கண்டறிய உயர் அதிகாரிகள் கிராமத்துக்கு அனுப்பபடுவார்கள் - ஜனாதிபதி மகிந்த
கிராம பிரச்சினைகளை கண்டறிவதற்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் கிராமத்துக்கு அனுப்பபடுவார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர பெண் தொழிலாளர்களை சந்தித்து உரையாடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் எடுக்கப்படும் சலுகைகள் தொடர்பான தீர்மானங்கள் கிராமங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, அரச அதிகாரிகள் தமது பொறுப்புகளை மேற்கொள்ளாiயானது மக்களுக்கு இழைக்கும் என தெரிவித்த ஜனாதிபதி அதனை தடுப்பதற்கான சகல விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Post a Comment