விளக்கம்
(அகமட் எஸ். முகைடீன்)
“கல்முனை மாநகர ஆணையாளரை இடமாற்றம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்னும் தலைப்பில் தங்களது இணைய தளத்தில் 30.10.2013 புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி உன்மைக்கு புறம்பானதாகும் என கல்முனை மாநகர சபையின் செயலாளர் எம்.ஏ.எம். அலாவுதீன் தெரிவித்தார்.
அச்செய்தியில் “கல்முனை மாநகர சபை ஆணையாளரை உடநடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும், நிரந்தர கணக்காளர் வேண்டும் எனவும் கல்முனை மாநகர சபை மாதாந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளரை இடமாற்றுமாறு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை ஆனால் எமது மாநகர சபைக்கு நிரந்தர கணக்காளர் இன்மையினால் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு உள்ளாக நேருவதனால் நிரந்தர கணக்காளரை நியமிக்க கோரி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது உன்மையாகும்.
அவர் மேலும் தெரிவிக்கையில். மாநகர சபை அமர்வில் பேசப்படுகின்ற விடயங்கள் ஒரு சொல் தவறாமல் கூட்டக் குறிப்பில் “ஹென்சாட்டில்” பதியப்படுகின்றன. இவ்வாறு இருக்கும்போது பிழையான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கி மக்களை தவறாக வழிநடத்துவது பிழையான விடயமாகும். இவ்வாறான உன்மைக்கு புறம்பான திரிவுபடுத்தப்பட்ட செய்தியினை ஒரு சில உள்நோக்கம் கொண்டவர்களினால் வழங்கப்படலாம். ஆனால் அச்செய்திகளின் உண்மைத் தன்மை தொடர்பாக மாநகர சபையின் செயலாளராகிய என்னுடன் தொடர்பினை ஏற்படுத்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
Post a Comment