எதிரியின் மூக்கை கடித்து கீழே துப்பிவிட்டு, யாரிடமும் பிடிபடாமல் ஓட்டம்பிடித்த வாலிபர்
ஜெர்மனியின் பிரெமென் நகரில் உள்ள ஒரு பாரில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. போதை தலைக்கேறிய உள்ளூர்வாசிக்கும், நார்டென்ஹாம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவரையொருவர் மூர்க்கத் தனமாக தாக்கிக் கொண்டனர்.
பாரில் இருந்த மற்றவர்கள் சண்டையில் தலையிட்டு இருவரையும் பிரித்து வைத்தனர். இருப்பினும், ஆத்திரம் அடங்காத நார்டென்ஹாம் நபர், கவுண்டருக்கு சென்று இன்னொரு 'ரவுண்ட்' ஏற்றிக் கொண்டு ஊள்ளூர்வாசியை வெறிக்க, வெறிக்க பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தார்.
உள்ளூர்வாசி அசந்த நேரத்தில் அவர் மீது பாய்ந்து மூக்கை கரகர என கடித்து கீழே துப்பிவிட்டு யாரிடமும் பிடிபடாமல் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார்.
ரத்தம் சொட்ட, சொட்ட உள்ளூர்வாசியை ஆஸ்பத்திரியில் அனுமதித்த பார் ஊழியர்கள் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தப்பியோடிய வாலிபரை பிடிக்க பிரெமென் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
IPPADITHAAN IWANGALDA CULTURE
ReplyDeleteWELI ULAHUKKU MAAYA KAATURAANGAL