உலகின் மிக மோசமான விமான நிலையம்
விமான நிலையங்களின் தரம் மற்றும் பயணிகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் ஆகியவை குறித்து ஆன்லைன் போக்குவரத்து இணையதளம் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்படி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலைய முனையம் (டெர்மினல்) உலகின் மிக மோசமான விமான நிலைய முனையம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாழடைந்த வசதிகள், நேர்மையற்ற விமானநிலைய ஊழியர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள், நீண்ட நேர காத்திருப்பு, கடுமையாக நடந்துகொள்ளும் அதிகாரிகள் என பிலிப்பைன்ஸ் முதல் டெர்மினல் பற்றி பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
தூய்மை, வாடிக்கையாளர் சேவை மற்றும் பயணிகளின் வசதி ஆகிய அடிப்படையில், ஏராளமான மக்கள் வந்து செல்லும் மணிலா விமான நிலையத்தின் முதல் டெர்மினல், உலகின் மிக மோசமான டெர்மினல்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளதாக அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு முடிவினை விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதெல்லாம் பழைய பிரச்சினைகள், தற்போது நிலைமை மேம்பட்டிருக்கிறது என்று முதல் டெர்மினல் மேலாளர் கூறுகிறார்.
ஆண்டுக்கு 6.5 மில்லியன் பயணிகள் வரை வந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ள மணிலா விமான நிலையத்தில் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 8.1 மில்லியன் பயணிகள் வந்துள்ளனர்.
மொத்தம் உள்ள 4 டெர்மினல்களில், முதல் டெர்மினல் 32 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இதனை புதுப்பிக்க அரசு 58 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.
Post a Comment