இலங்கையின் முதலாவது விஞ்ஞான பூங்கா - ஜனாதிபதி மஹிந்த திறந்து வைக்கிறார்
ஹோமாகம, பிட்டிபன பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது விஞ்ஞான பூங்கா மற்றும் நேனோ தொழில்நுட்ப மையம் என்பன இன்று திறந்து வைக்கப்படவுள்ளன.
இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் அமைச்சர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
போட்டித்தன்மை கொண்ட உலக தொழில்நுட்ப சந்தைக்கு ஏற்ற வகையில் இயற்கையான மூலப்பொருட்கள் சார் நேனோ தொழில்நுட்ப உற்பத்திகளை மேற்கொள்வதே இதன் பிரதான நோக்கம் என தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சு குறிப்பிடுகின்றது.
விவசாயம், சுகாதார பாதுகாப்பு, நீர் சுத்திகரிப்பு, ஆடை உற்பத்தி போன்ற துறைகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு நேனோ தொழில்நுட்பத்தின் ஊடாக அவற்றிற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2006 ஆம் ஆண்டில் நேனோ தொழில்நுட்ப ஆய்வுகள் தொடர்பான செயற்றிட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment