அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஜனநாயகம், ஒப்பீட்டளவில்..!
தேபானிஸ் அல்விஸ் என்பவர் ஆற்றல்மிக்க எழுத்தாளர் அவர் உலகலாவியரீதியில் நாடுகளுக்கிடையே நடைமுறையியிலுள்ள அரசியல்முறைமைகள் தொடர்பான போதிய அநுபவத்தைக் கொண்டிருப்பதுடன் பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களினூடாக தனது பங்களிப்பைச் செய்துவருகின்றவர் அவர் வாஷிங்டனில் வசித்து வருவதுடன் இவ்வாக்கத்தில் அமெரிக்காவிலும் இலங்கையிலும் நடைமுறையிலுள்ள ஜனநாயகம் தொடர்பாக ஒப்பீட்டளவில் ஆராய்கின்றார்
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஜனநாயகம், ஒப்பீட்டளவில் எமது காலப்பகுதியில் அரசியலென்பது புனிதமான மந்திரமாக உள்ளது.அதிகமான நாடுகளில் அரசியல் முறைமைகள் எவ்வாறு இருப்பினும் அவை ஜனநாயகத்தையே கோருகின்றன.அமெரிக்கா போன்ற ஒரு பாரிய ஜனநாயக நாடு ஏனைய நாடுகளின் விவகாரத்தில் தன்னிச்சையாக தலையிடுவதுடன் அவற்றுக் கெதிராக யுத்ததிலும் ஈடுபட்டு அவற்றை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருக்கின்னறது.எனவே இவ்வாறான ஜனநாயகமானது இலங்கை மக்களின் நடைமுறையிலுள்ள மக்களின் அநுபவத்துடன தொடர்பான ஜனநாகத்தோடு ஒப்பீட்டளவில் ஆரயப்படவேண்டியுள்ளது.
வாக்களிக்கும் உரிமை
வயதானவர்களுக்கான உரிமைச் சுதந்திரம் எனும்போது ஒரு நாட்டின் பிரஜை, தேர்தலொன்றில் சுதந்திரமாக தான் விரும்பிய அரசியல் வாதி ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கும் உரிமையை குறிக்கின்றது. இது சாயம் பூசப்பட்ட அரசியலையும் ஜனநாயத்தையும் பரீட்சிக்கும் ஒரு களமாகவே கருதப்படுகின்றது.1850 ஆம் ஆண்டு அதிகமான அமெரிக்கர்கர்கள் தமது சொத்துக்களை மையப்படுத்தாமல் அதாவது சொத்துக்களை இழக்காது வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.1870 ஆம் ஆண்டு 15வது அரசியல்யாப்பு திருத்தத்தின்படி அமெரிக்காவிலுள்ள ஆபிரிக்கர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.ஆனால் பல மாநிலங்கள் வாக்காளர்களை பதிவு செய்ய மறுத்தன.இதேவேளை 1920 ஆம் ஆண்டின் 19வது அரசியல்யாப்பு திருத்தத்தின்படி பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.எனினும் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன் ஒவ்வொரு மாநிலமும் தமக்கான சட்ட நியதிகளைக் கொண்டிருந்ததால் பல தென்மாநிலங்களில் எழுத்தறிவு போன்ற பரீட்சையில் தேராததால் கருப்பினத்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கபட்டது. இதன்விளைவாக டாக்டர் மார்டின் லூதரின் முயற்சியால் இவ்வாறான தேர்வுப்பரீட்சைகளின்றி கருப்பின மக்களும் வாக்களிக்கும் உரிமையை பெறும் பொருட்டு 1966ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவர முயற்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் இன்றும் சில மாநிலங்களில் கருப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாதிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
சில மானிலங்களைப் பொருத்தவரையில் வாக்குரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்யப்படுபவர்கள் கட்டாயமாக பிறப்புச் சான்றிழ்களைக் கொண்டிருத்தல் வேண்டும் அவர்கள் அரசினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையோ மாநிலங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையையோ மேலும் வாகணம் ஓட்டும் அநுமதிப்பத்திரத்தையோ உத்தியோகபூர்வமாக கொண்டிருந்த போதிலும் அரசினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் வாக்களிக்க முடியாது துரதிஷ்டவசமாக அதிகமான வறிய கிராமப்புற மக்களுக்கு அரசினால் பிறப்புச் சானறிதழ் வழங்கப்படாமல் உள்ளமை புதிராகவே உள்ளது.
1931 ஆம் ஆண்டு இலங்கை காலனித்துவ நாடாக இருந்தபோதிலும் டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் மக்கள் வாக்குரிமையைப் பெறக்கூடியதாக இருந்தது.இந்த வாய்ப்பைப் பெறும் பிரித்தானியாவின் ஒரேயொருகாலனித்துவ நாடாக இலங்கை மாத்திரமே இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுதந்திரத்தையடுத்து வாக்களர்களைப் பதிவு செய்யும் பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்திடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.எனவே இத்திணைக்களமானது தேர்தலுக்கு முன்னர் வீடு வீடாகச் சென்று வாக்களிக்கும் தகுதியைக் கொண்டுள்ளவர்களின் தகவல்களை சேகரிகத்து வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணியை தொடங்கியது. தகவல்களைச் சேகரித்த பின்னர் ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள தபாலகங்களில் வாக்காளர் விபரம் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் விபரம் போன்றவை மக்களின் பார்வைக்காக பட்டியற் படுத்தி தொங்கவிடப்படும்.தமது பெயர்கள் விடுபட்டவர்கள், இதன்மூலம் மேலதிக தகவல்களை திணைக்களத்தினூடாகப் பெற்று தமது உரிமையை உத்தரவாதப்படுத்தக்குடிய சூழல் உருவானது.
பல கட்சிகளைக் கொண்ட தேர்தல்கள்
தேர்தல் ஒன்றில் பல கட்சிகள் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையானது ஜனநாகத்தை உறுதிப்படுத்தக்கூடிய மேலுமொரு உதாரணமாகும். சீனாவில் ஒரு கட்சிமாத்திரம் உள்ளதோடு அமெரிக்காவில் இரு கட்சிகள் மாத்திரம் உள்ளன அவை அடிப்படை அரசியல் தத்துவங்களிலுருந்து வேறுபட்டு காணப்படுகின்றன. மேலும் ஒரு தேர்லுக்காக அதிகூடிய பணத்தைச் செலவிடுகின்றன. இலங்கையிலோ நிலைமை இவற்றிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.இலங்கை அரசியலைப் பார்க்கும் போது பல எண்ணிக்கையான கட்சிகள் போட்டியிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது பொது உடைமைக்கட்சிகளுக்கு தேர்தலில் பங்குபற்றும் சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பும் முகாமைத்துவமும்
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களிலும் அம்மாநிலங்களின் கீழுள்ள செயலாளர்களின் அதிகாரிகளினால் வாக்கெடுப்பும் வாக்காளர்களைப் பதிவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வதிகாரிகள் அம்மாநிலங்களின் ஆட்சியின்கிழ் உள்ள கட்சிகளினால் தெரிவு செய்யப்படுகின்றனர். 2002 ஆம் ஆண்டு புளோரிடா மாநிலத்தில் தேர்தலுக்கு முன்னதாகவே சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான கறுப்பின மக்களின் பெயர் விபரம் வாக்காளர் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டன. இது குடியரசுக்கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தமையை நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.பல மாநிலங்களில் வாக்கெடுப்பு இயந்திரங்கள் தனியார்கம்பனிகளால் மேற்கொள்ளப்படுவதுடன் வாக்கெடுப்பு நடத்தும்போது பொதுமக்கள் அநுமதிக்கப்படுவதில்லை.எனவே மாநிலங்களின் செயலாளர்களினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கம்பனிகள் தெரிவிக்கும் முடிவையே ஏற்றுக் கொள்ளும் சூழல் அங்கு உள்ளது.இன்னும் சில மாநிலங்களில் வாக்கெடுப்பு இயந்திரம் தவறான முடிவைக் காட்டக்கூடியதாக இருக்கும். இன்னும் சில மாநிலங்களில் வாக்குப் பதிவு நிலையங்கள் போதுமானதாக இருக்காது அத்துடன் வாக்குப் பதிவு நிலையங்களில் அதிகமான எதிர்கட்சி ஆதரவாளர்கள் குவிந்து இருப்பதால் ஆட்சியில் மாற்றத்தை எதிர்பார்க்கும் நோக்குடன் வாக்களிக்க வந்தவர்கள் வாக்குப்திவு நிறைவுபெறும் இறுதி மனி நேரங்களிலும் கூட வாக்களிக்க முடியாமல் திரும்பிச் செல்லக்கூடிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது. மேலும் தேர்தல் எல்லைகளை காலத்துக்குக் காலம் நிர்ணயிக்கும் அதிகாரம் ஆட்சியிலுள்ள மாநில அரசுகளிடம் உள்ளதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை சிதைவுறச்செய்யும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இது ஆளும் கட்சியனருக்கு வெற்றி பெற வாய்ப்பாக அமைகின்றது.2002 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதி மண்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒரு வாக்கினால் ஒரு வாக்காளரை இழக்க்க்கூடி நிலைமை உருவானது.
இலங்கையில் தேர்தல் முறைமையை நோக்கும் போது மிகவும் வெளிப்படையாக மேல் கூறப்பட்ட குறைபாடுகள் இல்லாதவாறு காணப்படுவதைக் கவணத்தில் கொள்ள வேண்டியதாகும். இலங்கையில் தேசிய அல்லது மாகாண தேர்தல்களைக் கருதும் போது தேர்தல் ஆணையாளரே அதிகாரம் பெற்றவராக இருப்பார்.தேர்தல் ஆணையகம் அரச சார்பற்றதாகவும் சுயாதீனமாக இயங்கக்கூடியதாகவும் இருக்கும், தேர்தல் ஆணையாளராக நியமனம்பெற்ற ஒருவர் பாராளுமன்றத்துக்கே பதில் கூறக்கூடியவராக இருப்பார் அத்துடன் அரச அதிகாரத்தினால் அவரை பதவியிலிருந்து அகற்றவுமுடியாது.இத்திணைக்களமானது வாக்குரிமையைப் பெறும் வயதை அடைந்தவர்களை வாக்காளர்களாக பதிவுசெய்யும் கடப்பாட்டைக் கொண்டிருக்கும்.இத்திணைக்களமே தேர்தல் எல்லைக்குறிய பொறுப்புக்களை பெற்றிருக்கும் மேலும் போட்டியிடும் கட்சிகளை வழி நடாத்தும் பொறுப்பும் இதற்கே உரித்துடையதாகும்.அனைத்துக்கட்சிகளும் தமது முறைப்பாடுகளைத் தெரிவிக்க தேர்தலகள் ஆணையாளரிடமே செல்லவேண்டும். தேர்தலில் குளறுபடிகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தேர்தலை ரத்துச் செய்யும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். தேர்தலுக்கு முன்னதாகவே பொலீஸ் திணைக்களத்துக்கு போதுமான அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலம் தேர்தல்கள் சுமூகமான சூழலில் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது.
இலங்கையைப் பொருத்தமட்டில் வாக்கெடுப்பு நிலையங்களில் சுதந்திரமாக தேர்தல்கள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு வாக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளையில் போட்டியிடும் ஒவ்வொரு அரசியல் கட்சியையும் சார்ந்த பிரதி நிதிகள் உள்ளே அநுமதிக்கப்படுவர்.இது ஜனநாயகமாக தேர்தல் இடம்பெறுவதை மேலும் வலுப்படுத்துகின்றது.
அரசு மீது செல்வாக்கு செலுத்துபவை
அனைத்து மக்களதும் ஆர்வத்தின் வெளிப்பாடாக அரசாங்கங்கள் தெரிவு செய்யப்படுகின்றனவே அன்றி குறித்த குழுவினருக்கோ அல்லது கட்சிக்காகவோ அல்ல.ஆயினும் அமெரிக்க தேர்தல் முறைமையில் அதிகார மட்டத்தில் அல்லது உத்தியோகபூர்வமாக பல தவறுகளைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.வாஷிங்டனில் 35,000 பதிவுசெய்யப்பட்ட முழுநேர தேர்ல்பரப்புரைளர்கள் உள்ளனர்.யாரேனும் அரசியல் தலைமைத்துவத்தைபெற விரும்பினால் தேர்தல் பரப்புரையாளர்களின் உதவி அவசியமாகும். இதேவேளை காங்கிரஸ் பிரதி நிதிகள் உள்ளூர் வாக்காளர்களின் நிதியுதவிகளை நாடுகின்றனர்.100 அமெரிக்க டொலர்களுக்கும்10,000 அமெரிக்க டொலர்களுக்குமிடையேயான தொகையை நன் கொடையாகப் பெற்றுக் கொள்கின்றனர்.
மக்களின் பங்களிப்பு
பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான மக்கள் தேர்வின்போது அமெரிக்காவில் உள்ள வாக்காளர்களில் 43-63% வாக்காளர்கள் மாத்திரமே வாக்களிக்கின்றனர்.ஆனால் இலங்கையில் 65-75%வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்களை புலிகள் வாக்களிக்க அனுமதிக்காததால் கடந்த யுத்தகாலங்களில் வாக்குப்பதிவுகள் குறைவடைய காரணமாக அமைந்தது. அமெரிக்காவில் தேர்தல் காலங்களில் இலங்கையில் வழங்கப்படுவது போன்று வாக்களிப்பதற்காக ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுவதில்லை அவர்கள் வாக்களிக்க வேண்டுமானால் சம்பளம் இல்லாமல் இரண்டுமணி நேர உத்தரவிலேதான் செல்லமுடிகின்றது. வாக்காளர்கள் வாக்களிப்பதில் ஆர்வம்காட்டாமை அமெரிக்காவில் அதிகரித்தவண்ணமே காணப்படுகின்றது. பல மக்கள் தங்கள் வாக்குகளானது தங்கள் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என்ற நம்பிக்கையிலேயே காணப்படுகின்றனர்.
இலங்கையில், மக்கள் தங்கள் உரிமைகளை மிகவும் உணர்வுபூர்வமாகவும் உறுதியாகவும் கோருகின்றனர். அரசாங்க கட்டுப்பாட்டையும் தாண்டி சில காரணங்களால், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் போது, பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் எதிர்ப்பை செய்ய நகரங்களில் தெருக்களில் கூடுகின்றனர். தொழிற்சங்கங்கள் பெரும்பாலும், அதிக சம்பளம் கோரி வேலை நிறுத்தங்களில் ஈடுபடுகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அரசாங்க துறையில் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் கடமை என்று நம்புகின்றனர் அதற்காக ஆர்பாட்டமும் செய்கின்றனர்.
அமெரிக்காவில் தொழிற்சங்கங்களின் சக்தியானது கடந்த தசாப்தங்களில் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்காவில்,இது ஒரு பணக்கார வர்க்கத்தை தொடர்ந்தும் செல்வம் நிரைந்ததாக மாற்றுகின்ற அதேவேளை வேலையின்மை அதிகரித்ததினால் 10 மில்லியன் குடும்பங்கள் தமது உடமைகளை ஈ அடகுவைத்தல் போன்ற காரணங்களினால் தங்கள் வீடுகளைக்கூட இழந்துள்ளனர்,இருந்தும் எதிர்ப்புக்களும் ஆர்பாட்டங்களும் அங்கு காண்பதற்கு அரிதாகத்தான் உள்ளது.
மக்கள் மீதான அக்கறை
மாற்றமடையும் ஜனநாயகத்தில் அரசாங்கம் தனது மக்களின் நீண்டகால அபிவிருத்திச் செயல் திட்டங்களில் அக்கறை காட்டவேண்டும்.விஷேடமாக பொருளாதாரத்தில் கீழ் மட்டத்திலுள்ள மக்களின் மேம்பாட்டை கருத்திற் கொள்ள வேண்டும் இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுவதோடு பல்கலைக்கழகங்களும் இயங்குவதனால் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடியளவில் இலங்கையும் கல்வி கற்ற சமூகத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசவைத்திய சாலைகளினூடாக இலவசமாக சுகாதார சேவைகளும் வழங்கப்படுகின்றது.இவ்வாறான வைத்தியசாலைகளில் இலவசமாக இதய அறுவைச்சிகிச்சைகளும் இடம் பெறுகின்றன.இது வறிய மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.இதற்கும் அப்பால் மருத்துவ தாதிகள் வீடு வீடாகச் சென்று தாய்மார்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் விழிப்பூட்டும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சமூக சேவைகள் உள்ளது அவையும் தற்போது குறைக்கப்படுகின்றன.பொது பாடசாலைக்கல்வி அங்கு இருந்த போதிலும் பல்கலைக்கழகங்களில் அதிகமாக செலவு செய்யவேண்டியுள்ளது. மருத்துவ சேவையும் மிகவும் செலவுமிக்கதாக உள்ளது.காப்புறுதியின்றி மருத்துவ சேவையைப் பெறுதல் அரிது காப்புறுதிக்கான தொகையோ மிகவும் அதிகம்.45,000அமெரிக்கர்கள் மருத்துவ காப்புறுதியின்றி உள்ளனர்.
இலங்கை அபிவிருத்தியடைந்துவரும் ஒரு நாடாகும்.தற்போது விரைவாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே இலங்கையும் உள்ளது.அமெரிக்காவோ உலகிலேயே செழுமைமிக்க நாடாகும் எனினும் தற்போது பொருளாதாரத்தில் தொடர்வீழ்ச்சியைச் எதிர் நோக்கியவன்னம் உள்ளது.
Post a Comment