யுவதிக்கு வலது பக்கத்தில் இதயம் - அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலையில் கண்டுபிடிப்பு
(யு.எம்.இஸ்ஹாக்)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் குடல் வளரி சத்திர சிகிச்சை செய்யப்பட்ட யுவதி ஒருவருக்கு வலது பக்கத்தில் இதயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சகோதரிக்கு இடது பக்க வயிற்றில் வலி ஏற்பட்ட போது பரிசோதித்த வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் குடல் வளரி என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு சத்திர சிகிச்சை செய்த போது குடல் வளரி வலது பக்கத்தில் இருப்பதை கண்ட வைத்திய நிபுணர் தொழில் நுட்பமாக குடல் வளரியை அகற்றியுள்ளார் . இதனை ஆராய்ந்த போதே இதயமும் வலப்பக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .
சத்திர சிகிச்சை செய்ததன் பின்னர் நோயாளி நல்ல ஆரோக்கியமாக உள்ளார். வலப்பக்கத்தி இதயம் இருப்பது அரிது எனவும் இலட்சத்தில் ஒருவருக்கு இவ்வாறு ஏற்பட வாய்பிருக்கும் என சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலை டாக்டர்.ஏ.டபிள்யு .எம்.சமீம் தெரிவித்தார்.
Post a Comment