ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு நான் சென்று விட்டால், கட்சியை பொறுபேற்க எவருமில்லை
கட்சியின் நலன் கருதியே தான் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக இருந்து வருவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.எகலியகொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் அதிகாரச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியில் ஏன் தொடர்கிறேன் என்று சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். கட்சியின் நலனுக்காகவே நான் தலைவராக இருந்து வருகிறேன். வேறு எவராவது கட்சியின் தலைவர் பதவியில் இருந்திருந்தால் அவர் மீது சுமத்தப்படும் இப்படியான அவதூறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் கட்சியை கைவிட்டு சென்றிருப்பார்.
ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு நான் சென்று விட்டால் இந்த கட்சியை பொறுபேற்க எவருமில்லை. எனது நலனுக்காக நான் கட்சியின் தலைவராக இருக்கவில்லை. கட்சியின் நலனுக்காகவே தலைவர் பதவியில் இருக்கின்றேன். என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்களை வழிநடத்தும் அரசாங்கத்தின் சூழ்ச்சி இருக்கின்றது. இதற்கு சில ஊடகங்கள் உறுதுணையாக இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய பயணத்தை மேற்கொண்டு புதிய முறையின் வழியாக கட்சியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். சிலர் என்னை விமர்சிக்கின்றனர். சிலர் என்னை சிறந்தவர் என்கின்றனர். என்மீது குற்றம் சுமத்துபவர்கள் எனது அலுவலக அறைக்கு வந்து குற்றச்சாட்டு என்ன என்பதை கூற முடியும். நான் வெளிப்படையாவன். பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்து கொள்ள முடியும்.
ஹெர்மன் குணரட்ன தொடர்பில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் அவர் சம்பந்தப்படுவார் என நான் நினைத்திருக்கவில்லை. எனது மாகாண சபை உறுப்பினரான கிறிஸ்சாந்த புஷ்பகுமாரவுக்கு துப்பாக்கி சூட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அவரை சென்று பார்த்த போது அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் நோக்கும் பொழுது அரசாங்கத்தின் ஆலோசகர் ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றார்.
ஆமாம்..... இவர்தான் வரலாற்றிலேயே அதிகம் 'தோல்வியடைந்த' எதிர்க்கட்சித்தலைவராச்சே......??????? இந்தப்பதவியை எவர்தான் பொறுப்பேற்பார்........???ஃ
ReplyDelete